Sunday 8 April 2018

நிழலில்த் தேடிய நிஜம்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 07th April 2018 04:29 PM  |   அ+அ அ-   |  
நினைவுகள் உனதாகலாம்,
நினைத்துனை பிணியாவது
நானல்லவா...
கனவுகள் சுகமாகலாம்
கண்ணிலே கனியாவது
தீயல்லவா!
என்னிலே நீயாகலாம்
உன்னிலே நானாகும்
நிமிடம் எதோ?
ஆழியே பனியாகலாம்-என்
ஆழ் மூச்சிலே
தாபமே!
நீயெனும் காட்டுத்தீ
நிலமெலாம் பரவிவிட்டாய்,
நீத்துவிட்டேன் நானே...
நீயெனில் உயிர் வளர்ந்தாய்.
நீ 
நிழல் வாழ்கிற 
நிஜம்.

Monday 2 April 2018

அலைபாயும் மனதினிலே: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 02nd April 2018 03:48 PM  |   அ+அ அ-   |  
நினைவின் கிறுக்கல்கள்
நிஜத்துக்குள் மாட்டிக்கொண்டு.
உனக்குள் அலைகிறவன்...
என்னை 
எண்ணிப்பார்
உன்னில் 
என் பாதி.
திருடவில்லை ஆனாலும்,
சாவி என்னது இல்லை!
வருவதும் 
திரும்பி நுழைவதுமாய் என்
மனது...
எனக்குள் 
வியர்த்து என் மனது
அலைகின்ற 
வினோதமென்ன !
எண்ணியே பார்த்திட
எண்ணமே இல்லையோ
என்னை?
இன்னுமே ஏங்கிக்கொண்டு...
இன்னுமேன் பூட்டி வைத்தாய்?
ஓர் 
ஜென்ம 
ஓரத்தில்
ஜெபித்திருந்தேன் உன் நாமம்!
நீ கண்டுகொள்ளவே 
இல்லா வெயில்கள்,
நன்கு நனைந்த
விடா மழைகள்,
நொந்து நடந்த
சுடும் மணல்கள்
நொடிகளில் நுழைந்து 
மீண்ட என் ஓலம்!
தட்டித்திறக்கிறாய்
எட்டி,
மீட்டப்படுகின்றன என்
ஒழிந்துகொண்ட நினைவுகள்.
தூரப் பறக்கிற அன்றில்
துரத்திப் பிடிக்கிற வேட்கை!
பகல்க் கனா
நிகழ்ந்துமா 
பச்சை?
நான்
நெருங்கப்
பறந்தது 
பட்டத்தின் நூல்,
பிடிக்கக் குதிக்க
தடுக்கி விழுந்தது மனம்.
தவிர்ந்து பறந்த நீ!
மழையும் வெயிலும்
தந்து போன தீ!
நான் 
மறக்கப்பட்டேனோ இல்லை
மிதிக்கப்பட்டேனோ?
மதிக்குள் ஒழிக்கப்பட்ட
மனதவன் நானோ?
உறைவிடம் தீண்டாமல்
அலைகிற என் மனது...