Tuesday 27 February 2018

எங்கும் எதிலும்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 25th February 2018 04:51 PM  |   அ+அ அ-   |  
வாழ்க்கை சக்கரமாகிறது...
கருப்பு வெள்ளை ஒன்றி
சுழல்ந்து வண்ணம் 
தருவதே வாழ்க்கை.
ஒளிக்குள் இருள்
நுழைகிறது,
இரவுள் பகல் முடிகிறது.
இன்று நாளையில் 
சங்கமிக்கும் போது,
எங்கிருக்கும் என்
சாலை?
பிழையுள் பிறந்து
கிளைகள் பரப்பிய 
பிண்டத்தின் வடுக்கள்
கைரேகை!
சுழல்கின்றது பாதை 
நெடியதென்று யாருரைத்தார்?
அது சுழன்றுகொண்ட
நீட்சி!
பருவகாலங்கள் 
திரும்புகின்ற வாழ்க்கை.
நிருத்தப்படாத நேரத்துள்
உருண்டுகொண்டு நான்...
துளைக்கப்பார்க்கும் சுரங்கம் 
இது.
நிலைக்கா நிசிகளில் 
எதனைப் பிடித்து வைக்க?
வழுக்கிச் செல்வதோ
விதியின் 
வழியே...
நானும் நீயும்
சந்தித்து 
நீங்கிடும் சஞ்சாரப் புள்ளிகள்!
நீழுமா பயணம்?
தூரங்களிலும் 
சேய்மைகளிலும்
நேரத்தோடு போட்டியுண்டு.
சேர்ந்து போன
நேற்றும் நாளையும்
ஊர்ந்து போயின ,
இன்னும் இன்றைப்
பிடிக்கவில்லை!
நேற்றின் அமுக்கம்
நாளையைத் தொடும்போது,
இன்று நசுங்கிக்கொண்டு
நீளம் இழக்கிறது...
நான் 
நீ என்ற வட்டம்
நாளை இன்றில்
நீழ்கிறபோது...
எங்கும் எதிலும்
தொட்டுச் செல்கிறோம்
பட்டும் படாமல்.

Monday 19 February 2018

அந்நாளே திருநாள்: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 17th February 2018 05:27 PM  |   அ+அ அ-   |  
ஒரு 
ஓடை காத்திருக்கும்.
சிறு
துளியைப் பார்த்திருக்கும்.

ஒட்டிய வயிரோடு
பட்டினியாய் 
ஒட்டகங்கள்!
தட்டுப்பாடு 
பச்சைக்கு இங்கே...!

மஞ்சள் மழை!
இலைகளும்
இறந்து போயின.

கிழட்டு மேகம்
தள்ளாடிப் போனது.
விழட்டுமென்ற கண்களின் 
சாபம்!
மலட்டு வானம்!

கருகிக் கருத்த
மாம்பிஞ்சு,-கேட்டது
"உருகிக் கசிந்த
மேகமெங்கு?"

வெண் வானம் தேடி
தென்மாங்கின் கூத்து!
வெந்தேயுயிர்த்துறந்த
தெப்பங்கள் ஆன்மாவோ?

நிலம் கூட 
நிழல்த் தேடிக்கொண்டு!
நிலவும் அப்பால்ப் போனதே...!
நில்லாயோ மேகமே!?

தூரத்தில் தூவானமோ?-அல்லது
கானலோ?
தூவாது வானமோ?-இயற்கை 
கோணலோ?

காய்ந்து போன
காடுகள்
காற்று மட்டும்
காவல்க்காரனாய்.

கதிரவனும் தோற்றுப் போனான்!
கடும் இரும்போ வானம்?
கனியவேயில்லை,
காய்ந்த உதடுகள்
மாய்ந்த வசந்தம் போல்
எத்தனை இழந்தோம்...

அன்னாந்த பார்வைகளுள்
அடிபடவேயில்லை,மேகம்!
வென்வானம் என்று வரும்?
நொடியெல்லாம் சிந்தனையதுவே...!

எந்நாளும் நீல நச்சு!
எரியாத குறையாய் தேகம்.
நச்சென வானம்.
நீலம் பாய்ச்சி விடமாய்ப் போயிற்று!
நீதமில்லாமல் வெண்ணாடை கலைந்திற்று!

நீ தேகம் தேறும்
காலம் பார்த்திங்கு...
நீரருந்தி தேகம் தொலைந்தாயோ?
காலன் தீண்ட 
நீத்த உன் வெண்ணழகு!

உயிரவதரிப்பாய்!
உவப்பளிப்பாய் 
உயிர்க் கொடுப்பாய்!
வெள்ளாடை
உடுத்தவளாய் 
வெளிர்த்திங்கு பூத்தூவு!
உயிர்பெறுவோம்,
அந்நாளில்.
உயிரூட்டும் நாள்த்தருவாய்.
உயர்த்தி மெச்சும் திருநாளை.

Monday 12 February 2018

வஞ்சம் செய்வாரோடு: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 11th February 2018 03:16 PM  |   அ+அ அ-   |  
மனம்
இனம் கானாத
மௌனப் பார்வைகள்;
குணம் யாரறிவார்?
உளம் 
உயிர்ப்பெற்றிட
உணர்வாரோ?
உமிழ்தலும் அழகோ?
ஒரு பனித்துளி
சுட உருகிடாதோ,
சிறு பரிதாபம்
ஏது...
நச்சு முள் மரம்
நட்டு வைத்தோர்
நன்மை ஏது 
கண்டார்?
மொட்டு சூழ்ந்து
ஒட்டி நின்ற
முட்கள் கண்டுகொண்டும்,
தொட்டு முட்டும் காற்று...
முட்கள் 
மட்டும் செய்யும் அராஜகத்தில் மூச்சு 
முட்டும் 
வாட்டம்!
மொட்டெனப் பிழந்து
மலரெனப் பிரிந்து
காய்ந்து கனிந்தது உதிர்ந்திட
உண்ணார்,
கொய்தலே முறையென 
யாருறைத்தார்?
கொலைஞர்கள் சரியென
யார் விதித்தார்?
மகரந்தத் துகளாகி
மலர்களில் நான் உறைந்தாலும்
மகரங்கள் மொய்க்கையில்
மலர்விட்டுப் போனவள் நான்!
மருதானி ஆகிப்போனேன்
வண்டுக்கும் தேனிக்கும்.
மறு நாளில் நீங்கிப் போனேன்
வழியில்லா இழிவாகி!
நான் உதிரும் வரை
தான் உயர்த்தப்ப்ட்டேன்.
யான் உருச் சிதைய
ஏன் உரிமை இழந்தேன்!
உதிர்த்துப் போட்டவர்
உயிர்க் கொய்தவர்
உடல் சிதைத்தவர்
உரிமை பெற்றனர்!
உலகமே சிதைந்தவள்
உயிரைத் தேடி...
துரத்திச் செல்லவா
தூரம் தேடி? -விஷக்
கரங்கள் கொய்யவா
மரங்களில்த் தேடி...
என்
உருவம் திரும்பிடுமா
முன் உயிரை நோக்கி?
கரும் இருளும் விடிந்துவிட்டால்
என் பகலை நோக்கி...!
துஷ்டனே!-நீ
புஷ்பங்களில் தேடும்
ஆயுதம் நானோ?-என்
நிஷ்களத்துள் நீ
ஆழ்தலில் என் ஜெயம்!
நான் 
நச்சுத் துகள்
உன்னோடு!
துச்சனுக்கோர் 
உடங்கமிழ்தம்!
நீ
நீடு 
நீத்ததுன் உயிராக,
நான் தீதை போக்கிடும்
தீர்த்தமாக.
வஞ்சதிற்கு
நஞ்சென ஆகி,
வஞ்சனோடு நான்
நஞ்சன்!

தனிமையோடு பேசுங்கள்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 12th February 2018 05:16 PM  |   அ+அ அ-   |  
என்
உள்ளமோர் வானமாகிடாதோ...?
லட்ச நக்ஷத்திரம் ஏந்தி
உனக்களிக்க!
சில துளி
உப்பெனக் கசிந்தது.
சிக்குண்டு
அலைகளுக்குள் 
கடலெனக் கிடந்தேன்...
நுரைத்து நுரைத்து
கனவும் நினைவும்
தனிமையோடு பேசுங்கள்
என்றது.
மீன்களாய் ஓடியவள்
நீ,
மீதியில்லாமல் குடித்தாய்
மொழியை!
நான் வானத்தை
ஏங்கியவன்.
ஏன் நாணத்தில்
மூழ்கிவிட்டேன்?
இனி 
இருதயம் மொய்க்க 
துனிவில்லாப் பூக்கள்
இருளிலும் புயலிலும்
ஏது செய்யும்?
நீந்திக் கடக்கையில்
என் மன தாபங்கள்
நீரினால் அமிழ்த்திட
வின்மீன்கள் இறக்குமோ?
நான் 
தனிமையோடு பேசவா?
ஏன் 
இனிமையோடு நிலவைக் கானவில்லை?
கடலாகி விழுங்கிவிட்டேன்
நானோ?
இன்று அநாதையாகிவிட்ட அஸ்தமணம்
தானோ...!
குரலில்லாமல் மெளனம் 
கசிந்தது....
தனிமையோடு மொழியில்லாத
நிசிகள்.
அளவலாவல் ,
என் இரைச்சலில் 
அதிர்ந்து போனது
தனிமை!
நான் 
காற்றிடம் 
போ என்றேன்.
கானாமல் போய்விட்டன
அலைகளும்...
தேடினேன்!
என்
மனதமுக்கம் 
உன் ஓட்டத்தில்
மறைந்திடாதோ?
பெயராக்கடல் நான்
என் செய்வேன்...
தனிமையோடு 
எவ்வளவு தான் பேச?
இனிமையிழந்து 
துவர்ந்து போனதானேன்!
நான் 
விழுங்கிக்கொண்ட
சூரிய சந்திரன் என்னை
விழுங்க வற்றிப் போனேன்!
புள்ளியாகிவிட்டேன்!
நீ வாழும் நான்...
கொள்ளி வைத்தது என் கனவோ...!
புள்ளி!
உன் சுவாசம்?
புள்ளியை நீங்குவாயோ?
என்னிடம் 
துள்ளியோட நீ மறப்பாயோ?
சரி,
நீங்கு!
நான் சுடரில் குதிக்கிறேன்...
கடைசித் துளி
உன் சுவாசத்திலேனும் 
கசிந்து வாழ....!
கடைசித் துளி,
சுவாசமாகிறேன்!
தனிமையோடு பேசிக்கொண்டு...