அந்நாளே திருநாள்: ஷஹி ஸாதிக்
By கவிதைமணி | Published on : 17th February 2018 05:27 PM | அ+அ அ- |
ஒரு ஓடை காத்திருக்கும். சிறு துளியைப் பார்த்திருக்கும். ஒட்டிய வயிரோடு பட்டினியாய் ஒட்டகங்கள்! தட்டுப்பாடு பச்சைக்கு இங்கே...! மஞ்சள் மழை! இலைகளும் இறந்து போயின. கிழட்டு மேகம் தள்ளாடிப் போனது. விழட்டுமென்ற கண்களின் சாபம்! மலட்டு வானம்! கருகிக் கருத்த மாம்பிஞ்சு,-கேட்டது "உருகிக் கசிந்த மேகமெங்கு?" வெண் வானம் தேடி தென்மாங்கின் கூத்து! வெந்தேயுயிர்த்துறந்த தெப்பங்கள் ஆன்மாவோ? நிலம் கூட நிழல்த் தேடிக்கொண்டு! நிலவும் அப்பால்ப் போனதே...! நில்லாயோ மேகமே!? தூரத்தில் தூவானமோ?-அல்லது கானலோ? தூவாது வானமோ?-இயற்கை கோணலோ? காய்ந்து போன காடுகள் காற்று மட்டும் காவல்க்காரனாய். கதிரவனும் தோற்றுப் போனான்! கடும் இரும்போ வானம்? கனியவேயில்லை, காய்ந்த உதடுகள் மாய்ந்த வசந்தம் போல் எத்தனை இழந்தோம்... அன்னாந்த பார்வைகளுள் அடிபடவேயில்லை,மேகம்! வென்வானம் என்று வரும்? நொடியெல்லாம் சிந்தனையதுவே...! எந்நாளும் நீல நச்சு! எரியாத குறையாய் தேகம். நச்சென வானம். நீலம் பாய்ச்சி விடமாய்ப் போயிற்று! நீதமில்லாமல் வெண்ணாடை கலைந்திற்று! நீ தேகம் தேறும் காலம் பார்த்திங்கு... நீரருந்தி தேகம் தொலைந்தாயோ? காலன் தீண்ட நீத்த உன் வெண்ணழகு! உயிரவதரிப்பாய்! உவப்பளிப்பாய் உயிர்க் கொடுப்பாய்! வெள்ளாடை உடுத்தவளாய் வெளிர்த்திங்கு பூத்தூவு! உயிர்பெறுவோம், அந்நாளில். உயிரூட்டும் நாள்த்தருவாய். உயர்த்தி மெச்சும் திருநாளை.
No comments:
Post a Comment