Sunday 28 January 2018

நல்லதோர் வீணை: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 27th January 2018 06:05 PM  |   அ+அ அ-   |  
இயற்கையே
இசை எனக்கு,
இன்னொரு வீணை எதற்கு?
இலைகளின் அசைவதற்கு
ஈடெது இசைக்கணக்கில்?
விலையிலா இயற்கை
வீடெங்கள் 
நிலவுகைக்கு.
செவிகளில் இலத்திரன்
விரல்களின் டிஜிடல் யுகம்,
கவிதையெல்லாம் யுனிகோடென
மிரட்டுகின்ற செயற்கைப் படை!
இசைக்கவொரு புது வீணை
இயற்ற ஒரு மரமில்லை!
இருந்ததெல்லாம் இறந்து போன
இறுதிக்கனங்கள் நினைத்துப் பார்த்தேன்!
இன்னும் அழுதுகொண்டே 
வாடி நின்ற ஆணி வேர்...
இல்லா நிழல்த் தேடி
வானத்தில் இழைப்பாரி!
ஈரமில்லா பாடலிங்கு
உலர்ந்து போன சதை
நரம்பு!
உயிரில்லாமல் இயற்கை சாக
உரமில்லாத துறவு பூண்டு...
இயற்கை சாகிறது...
பாலையில் கள்ளி முள் மீதா
இசை மீட்ட ?

Wednesday 24 January 2018

தூரத்து வெளிச்சம்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 20th January 2018 05:30 PM  |   அ+அ அ-   |  
என் தரணம்...
இருக்கிப்பிடித்த
எசம்,
இமைக்காமல் அப்படியே
இசுவாச நாளம்.
இன்னொரு உலகில் 
தரணிக்கிறேன்.
இங்கு எல்லாமே
திரவத் தீண்டல்.
குழந்தையென
ஜனனித்தேனோ?
குருகிப்போன அசைவின்
விசை இங்கு!
அந்தத்தில் வீழ்ந்துவிட்டேன்!
தேடத்தேட இன்னும்
தேடும் தொலைவில்
பசைந்த என் உடல்.
ஈரம் ஊரும்
இரண்டாம் உலகம்!
தூரம் சென்றுகொண்டு,
இன்னும் முன்சென்றாலும்...
இது ஒரு
புது இயற்கை எனக்கு!
இன்னும் செல்கிறேன்,
புதைந்தவன் நீந்திட
இடைவிடாத அமுக்கம்...
ஏதை நீங்குவேன்?
இருப்பதெல்லாம் அதுவாகி
கா!
ஈரக்கா!
புகுந்து புகுந்து
புதுவிடம் தேடிக்கொண்டு
புதைந்து ,தொலைந்து
அலைந்தும் 
நிலைத்து...
நெருங்க நெருங்க
நீங்கிச் செல்லும்
நிலவென ஓடும்
நிழலா நீ?
நுழைந்து கொண்டு
மீழும் போர்!
நணிச் சொட்டுக்கள்
நகர்தலில் என்
நடமாட்டம்!
எட்டிப்பிடிக்க இயலவில்லை,
துரத்திச் செல்கிறேன்...
என்னைத் துரத்தும்
ஈரச் சுவாலைகள்,
எரிந்து தீர்க்கின்றன இடைவெளிகளை!
இங்கு,
இடைவெளிகள் 
கிடையாது.
நான் பின்னலில் 
ஓர் நூலாகிறேன்.-இது
இறுக்கப்பின்னல்!
கடவுட் துகள்களில் 
நானும் "திரவன்" ஆகிட!
கடவுள்த் துகளானவன்.
நானும் நெருக்கமாகிறேன்.
ஒளியானவனின் ஓர்
துளியான பிரதிமையாகிறேன்!
நுண்மையில் நான்
துகள் அண்ணவன்.
பிரபஞ்சங்களின் கருமை,
இரவு பகலிலில் ஒருமை-அச்
சொட்டுக்களில் வாழ்கின்றன 
இறைவனின் ஒளித்துளிகள்.
கண்ணாடித் துகள்,
என் உருவாகிறது!
நான் காட்டும்போது 
அவன் இறைமையாட்சி.
கரையாமல் நான்
தனித்துவத் திரவன்.
கடவுளின் பிம்பம்
என்னில் ஏற்றவன்.
திணிவில் நீங்கி
திவ்வியம் நெருங்கி,
கருமை மெதுவாய் விட்டு
நீந்தி,ஒளியை
ஏந்தி...
ஒளிச்சொட்டுக்கள்
தெளிவான எட்டுக்களாயின.
ஒழிவு மறந்தேன்.
தெளிவில் மீண்டும் பிறந்தேன்.
கறுமையுள் அழுந்த
வெறுமையாய் கனத்திருந்தேன்...
கறுமையின் நீங்க
வெளிர்ந்து நான் 
கனம் இழந்தேன்.
சேய்ந்திருந்த துளிகள்
கற்றையென மோட்சம் பெற,
காய்ந்த ஈரம்
தேய்ந்து போக...
சங்கமித்தேன்.

Sunday 14 January 2018

யுத்தம் செய்யும் கண்கள்: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 13th January 2018 05:43 PM  |   அ+அ அ-   |  
சத்தம் இல்லா நாழிகைகள்
ரத்தம் சிந்தா வடுக்களில் ஒழிந்து கொண்டு!
நித்தம் நித்தம் 
ச்வப்தம் இல்லா அசைவுகள் அவை!

நுண்ணிய பார்வைகளுள்
நொருங்கி ஒழிந்துகொண்ட,
இரகசிய இரசனைகள்...!
நொந்தும் வலி சிந்தா
இருகிப்போன பனிக்கட்டிக்குள் போல்
இருதயம்!

கடல்த் தொடா வானம் போல்...
உடல் இல்லா வருடலோ கண்ணில்?
உறைந்த பனிக்கல்லில்
மறைந்து போனது தொடலின் உரிமை!

தூரப் பாலையும் 
பனிப் பாறை சிக்குண்ட மனமும்!
துரத்திச் செல்லும் பார்வை மட்டும்,
பதிந்த உருவம் படிந்தே கிடக்க!
துளைத்துச் செல்லும் 
புழுவெனத்தவிப்பு!
புழுதி கூட ஈரமாக...

வரண்டு போன எந்தன் கண்கள்!
கரடு முருடு தளங்களின் மீது
ஒளித் தெரிப்பு உடைந்து
நெலிய!
உருகி உடைந்து உயிர் பெற்றாலும்
கருகிப் போன கண்ணதன் தேடல்!

நெருங்கியே செல்லும் கண்ணில்
நட்டுப்போட்ட அம்புளிகளுக்குள்,
நுழைந்து செல்லும் சிவந்த குழாய்கள்
நூராயிரம் தாண்டிக்கொண்டு!
நுழைவே இல்லா இலட்சியத்தில்
ஏதோ ஒரு எதிர்பார்ப்பு!

மனதோடு மல்யுத்தம்!
பார்வைக்குள் நுழைந்து
பந்தாடிப் பார்க்கின்ற 
விதியின் வாள் வீச்சு!
நிறமில்லாமல் இரத்தம் வடிகின்ற
விசித்திரப் போராளி கண்!

Saturday 6 January 2018

Please like and share

https://youtu.be/NCRHNd53r6c https://youtu.be/NCRHNd53r6c


வீணையின் நாதம்: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 06th January 2018 04:29 PM  |   அ+அ அ-   |  
தனிமையில் ஓதும்  
ஒருமையின் பாடல்!
தலைவியின் காதில்
ஒலிக்காதோ ?
வருத்தத்தில் வாடும்
மனததன் குமுறல்
வீணையின் நாதம் ஆகாதோ?
மனமே இனிக்காதோ...?
பாடும் வீணையின்
தேடல் என்னவோ?
நாடும் இன்பமே
தீராதோ?
பெண்ணின் நடையெண்ணி
வீணைக் கூந்தல் வருட
கண்ணின் துளி கொல்லும்
கவிதை அந்த சங்கீதம்!
வின்னும் மண் தொடுகின்ற
மின்னும் சங்கமத் துளி
வின்கதிர் ஆகிடும்
மனங்களின் நடுவிலே..
அது,
கனவு தேசத்தின்
கடிவாளம்.
பிடித்து நடந்தால்,
மிதித்து செல்லும் மாய
லோகம்!
நான்
ஓடி
ஓய்ந்திடும் புல்லி மான்.
ஒரு முறையல்ல;
ஓராயிரம் பால்க் கடல்
உரிஞ்சித் தீர்த்த 
பெருமிதம் போலந்த
வீணையில்
வீழ்ந்தவன்!
அந்த 
சிரிப்பொலி,குரல் மொழி
நாதத்தில் அவள்
சுருதி...
இனிக்கின்றது...