Sunday 25 March 2018

இரை தேடும் பறவை: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 25th March 2018 03:06 PM  |   அ+அ அ-   |  
தேடலில் 
விடிகிற நாளைகள்...
தேடிடும் 
முடிவுறாப் பாதைகள்.
ஆயிரம்
ஆதவன் உதித்திடும்
நாளைகள்,
நாடிடும் உடுக்களின் 
மாறிடும் ஜாடைகள்;
ஆறுதல் இல்லா 
மீறுதல் கனவில்...
இன்று கான்கிற 
நாளை,
இல்லை விடிகிற 
வேலை!
ஒரு 
தூரப் பார்வை 
ஆழ்கிற பயணம்...
தூக்கிச் செல்லுது
ஆன்மா உடலை...!
ஊர்ந்து செல்லுது 
வயது...
ஊரும் கன்னிலே 
கனவு...
கொய்திடச் செல்கிறேன்,
கைகளில் காற்று விலங்கு
பூட்டிவிட்டதோ காலம்!?
தான்டிச் செல்ல 
மீழ்கிற தடை!
தேடலில் முடிந்து
தேடலில் விடிகிறது
நான் எனும் பறவை.
மீண்டும் பறக்க 
நான் ஆசை கொண்டு,
தேடும் இரை 
தான் தேடலில் உண்டு.
நான் 
பறக்கிறேன் இன்னோர் 
நாளைத் தேடி...
அது விடிகிறபோது
நான் தொடுகிற எண்ணம்,
தொலைவில் வைத்த 
இலக்கு என்
இரை.
தொடுவதற்காகவே
பிறக்கிறது தேடல்.
நாளை...
-ஷஹி சாதிக்.

Sunday 18 March 2018

நெருப்பின் தாகம்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 17th March 2018 05:53 PM  |   அ+அ அ-   |  
சுவாலைக்குள்த் தான்
சுருண்டுகொள்கிறது...
கருப்பாக.
நான் 
திரும்பிப் பார்க்கும் இருள்,
சூழப்பட்டு சதிவலை.
இருளுக்குள் ஒழிந்துகொண்ட
இதம்.
கை நீட்டிப் பிடிக்கிறது
என்னை...
கைதியாகிப் போகிற என் எல்லைகள்.
தூண்டலில் ஓடும் என்னில்
தேடலை தூண்டும்
தூண்டில் அது
ஓடல்...
நான் 
நட்ட மரங்களில்
மலரட்டுமென்ற 
மந்திரம்.
தொடர் பயணம்
ஏரிப் பிடித்து உயர்கிற வினோதம்.
தொலைவைத் தொடுகிறேன்.
எரிகிற இலட்சியத் தீ!
படர்ந்தது நிலத்தில்,
பற்றி எழுகிறேன்...
கொஞ்சம் கொஞ்சம்...!
மிதிக்கப்பட்ட சருகு
நான்,
மிகைத்து எழுந்த 
தணலாக!
இழிந்து விழுந்த 
இலை அன்று,
உயர்ந்து எழுந்த
உஷ்ணக்கொடி!
நான் தீண்ட
நடுநடுங்கும் தீண்டல்!
தாகிக்கக் குடித்தாலும்
தாகிக்கிற மனது!
தாக்கிப் பிடிக்கிறேன்-இலட்சியங்கள்
தாங்கிக்கொண்டு!
பயணம் இன்னும் 
நீழ்கிறது...

Monday 12 March 2018


தற்கொலை செய்யும் கனவுகள்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 11th March 2018 04:34 PM  |   அ+அ அ-   |  
மண்ணில் பசுமை
விதைத்துக் காத்திருந்தோம்...
தண்ணீரென சமாதாணம்
இறைத்து.
எங்கள் மரங்களில்
கருணை பூத்தன.

இரவுகளில் இருளும்
தொலைந்திருந்தது.
இதயங்கள்
இணைந்திருந்தோம்.
ஓர் நாள்,
நாங்கள் திருடப்பட்டோம்.
ஒரு காட்டுத்தீ
கரித்துப் போன சமாதாணம்!
நிலவைக் கட்டிவைத்திருந்தேன்,
கயிறும் எரிந்து போனது!
பிளவில் சுருண்டு படுத்து
ஊதிக்கொண்டே பெருநெருப்பெடுத்தனர்!
மீண்டும் வரா இருள் 
எம் கனவு,
சீண்டிட புகைந்தெழ
என் செய்வோம்?
புல்லெல்லாம் சாம்பல் நிறம்!
அவர்கள் எரிக்க, நாங்கள்
கரிகிறோம்...!
யானைகள் தூங்கும் காடிது.
பச்சை உண்ண மட்டும்?
யாரெல்லாம் இருந்தார்களோ
தப்பியோடி கை விரித்தனர்.
புஷ்பம் பூக்க
உஷ்ணச் சாம்பல்
உரமோ?-நாங்கள்
கொழுத்தப்பட்டு?!
அவர்கள் பூக்கும்
கனவுகளில் ஏதும்
அஹிம்சை ஆழமில்லை.
ஆனாலும் பூக்கின்றன!
நாங்கள் உரமாக்கப்படும் சதி!
ஆறுகள் திசைதிருப்பப்பட
காட்டுத் தீ...!
தாபத்திற்காய்,
பூவின் தேன் பருக மாட்டோம்!
காபனில் வாழும் பூ என்னோடு
ஆவியாகட்டுமென,தற்கொலை
செய்யட்டும் என் கனவும்...!
இது தான்
இறுதி என...
புது கனவுளங்களே
குருதி வளர்த்துக்கொள்ளுங்கள்,
புயல்த் தீண்ட மீண்டுமெழுவோம்,
கனவு வளர்த்துக்கொள்ளுங்கள்!

கொஞ்சி விளையாடும் கோபம்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 05th March 2018 03:37 PM  |   அ+அ அ-   |  
தேகம் உருகிடும் 
மேகன் நீ.
தேய்ப்பதோ நான்
வெய்யிலென்  ஆயுதம்.
உனக்குள் உதிக்கையில்
உலகே மறக்கிறேன்.
உரங்கும் நொடியிலும்
உனை நான் நினைக்கிறேன்.
சுடராகப் பிறந்துவிட்டேன்...
எதிரெதிரே சந்திப்பு!
தொடுகையே இல்லாமல்
எந்நாளும் உதிப்பு!
நீ கொஞ்சும் குளிர்மை...
நானோ,
தீ!சுடுகிறேனோ!
தீண்டத்தான் நினைக்கிறேன்
தாங்காது உன் தேகம்!
என் விரல்களின்
சுடுகின்ற கோப இயல்பு...
உன்னைத்
தொடுகையில் அழுகிறாயோ?
வின்னைத் தொட
தொலைவதேன் நீயென,
கண்ணை மறைந்து 
தொலைவில் கிடந்தேன்!
இரவு பிறந்திருந்தது!
நான் கண் மறைந்ததாலோ?
உறவு நீ
கண் படாமல் 
துறவு போல ஓர் வாழ்க்கை
இரவு ஒன்று தான்,ஆனால்
யுகங்களின் கொடுமை...!
மீண்டும் கண் திறந்தேன்...
நீ இருளில் விழித்திருந்த 
மீது நான் உதித்தெழுந்தேன்...
நான் கொடுமையானவள்!
இன்று மென்மையோடு 
மோதிடும் போது நீ
உதிர்ந்துவிடுவாயோ?
நான் சினத்தினள்
பார்வையால் உனை
ஏன் உருத்த?
என் இயற்கை
உனக்குமா விலக்காகவில்லை...
நெருங்க நெருங்க
தூரச் செல்கிறாய்!
உன்னில் தொலைகிறேன்.
தூரல்களும் சாரல்களும்
என்னை வில்லால் தடுத்தன!
நான்
தூரக்கிடக்கும் போது
எண்ணி வெந்தவள்.
நீ மென்மையின் கொஞ்சல்.
என் எல்லையெல்லாம்
நீயாகி...
திரையாகிறாய்,
தீண்டினாலும்,
தினம் தாக்கினும்
என் சினம்,
மனம் ஏன்
தண்மை உனக்கு 
மட்டும்?
நான் 
அன்பினால் நெருங்க
சினம் தான்
அரவணைப்பாகிறது!
நான் சூரியப்பொட்டு
நெற்றியில் உன்.
என் 
ஆசைக்குள் உன்
அல்லல் !
என்
சிரிப்பிலும் கூட
மென்மை கானாயோ?
சுபாவம் இறந்துவிட்டால்
இயற்கை என்செய்யும்?
பாவம் இயற்கை என்று
இருப்பு எதோ அதுவாய்க் கிடந்தே...
தனியாமல் எரிகிறேன்!
சுவாலையால் உருக்கினேனோ?
தவிப்போடுகிடக்கிறேன்...
பார்வையேனும் வாழட்டுமென்று...
கொஞ்சலாய்ப் பார்க்கிறேன்.-நீ
அஞ்சிடும் பார்வை எனக்கு!
நெஞ்செலாம் தாபம்,
மிஞ்சலே மீண்டும் 
நெஞ்சில்...எரிகிறபோது உன்
கொஞ்சலைக் கேற்கிறேன்!
நீ 
நீங்கிச் செல்கிறாய் 
தீ 
தாங்கிக்கொள்கிறேன்!
நீ
சாரலால் கொல்கிறாயோ?
உன் 
குளிர்ச் சினத்தில்
புன்னகைக்கிறேன்!
எனக்கதனைக் கொஞ்சலாய்
புனைந்துகொண்டேன்.
குளிர்க்கோபம்.
எனக்குள் சமநிலையாகிறது.
துளி கூட
எட்டிப்பிடித்து வானவில்லாய்
ஜொலிக்கிறது.