Tuesday 26 September 2017

பறவையின் மனசு: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 25th September 2017 03:27 PM  |   அ+அ அ-   |  
பறந்துகொண்டே தான்
இருக்குமா?
இறக்கை விரித்தபடியே தான்
நடக்குமா?
ஏதோ ஓர் 
திசை நோக்கி...
ஏரெடுக்கும் பார்வை 
அது.
ஒவ்வொரு இரகும்
ஓராயிரம் கணம் படும்.
எவ்விடம் போகவும் 
ஏராமல் எப்படி பறந்திடும்?
துரத்திக்கொண்டே 
ஓர் திசையை...
ஓர் இலக்கை.
ஓர் விசை ,இழுத்தெடுக்க
ஏரிப் பறந்திடும் வானம்.
அது ,
காற்றைக் கிழிக்கும்
கருவி!
மழையில் நனையாக்
குருவி.
வெய்யில் வெட்டும் போதும்
வெந்தும் மேலெழும் 
அருவி!
பறவையாகிறது!
வானில் 
பறப்பதால்.
பறக்கிறது,
மனதை எடுத்துக்கொண்டு...
அலைகளோடு கைகுளுக்கும்
அபார இரஜதந்திரம்.
அடிக்கின்ற போது
இறகு கூட 
அடாது மடிந்தாலும்!
புரப்படலின் 
மீலல் நோக்கி,
பறந்தே தான் 
மீண்டும் 
தாழும்.
உயர்ந்துகொண்டே செல்லும்
போதும்,
ஊடே பரக்கும் கீழே 
மீண்டும்;
உண்ணிப்பான பார்வை
கொண்டு
உணர்ந்து பறக்கும்
மனது உண்டு.
அது,
பறவை மனது.
புதுத் தூரக் 
கனவொன்றும்,
பிழைக்காத மனமொன்றும்!
இறக்கை நம்பி
இலக்கை நம்பும்
உதிக்கை ஒன்று
இதயம் கொண்டு...
மிதக்கின்ற கற்பனை
பிடிக்க,
ஆயத்தம்.
மிரட்டல்கள்,
காற்றாக,புயலாக
நிமித்தங்கள்!
இருதயம் ஏதோ
சிறியது தான்,-ஆனாலும்
இறக்கை விரித்திடும்
சில நிமிடம்...
நொடியும் தளராமல்
பறக்கிறது...
புது முடிவை நோக்கி
தொடரும் பயணம்!

Monday 18 September 2017

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: ஷஹீ சாதிக்

By கவிதைமணி  |   Published on : 17th September 2017 04:15 PM  |   அ+அ அ-   |  
பிஞ்சின் நெஞ்சம்
கிள்ளும்,
கொஞ்சல் மழைத்
துள்ளல்...
கை நீட்டி,
வா என்னும்
மெய் மறக்கும்
வானம் பாடி,
மேலெழுந்த பார்வையோடு
வானம் பார்க்கும்
பிள்ளை உள்ளம்.
இலையெல்லாம்
இழைக்கப்படும்
மழைத்துளியை
நூலாய்ப் பற்றி.
நுழைந்ததனில்
நிழல் கொள்ளும்
இளம் மனங்கள்
நிழல் பற்றி.
மலர்ந்த இறகில்
மறந்த
மயிலும் ஆடும்
ஆட்டம் மலையைச் சுற்றி,
மழையின் பின்னே ஓடும்
ஓட்டம் மயிலை வெல்லும்
அழகுச்
சுட்டி.
குடையை மறந்தே
பறக்கும் மனங்கள்
குளிருமங்கே மறந்து போகும்;
உயரப் பறந்தே மழையைக் கொய்து
களிப்புக் கொள்ளும்
வயது கொண்டு...

Monday 11 September 2017


சேர்த்து வைத்த கனவு
விழிக்கும் போதெல்லாம்
மொட்டு விரியலாயிற்று!
நினைக்கும் போதெல்லாம்
சொட்டுக்கள் சுரந்து இனிக்கலாயிற்று.
பிறக்கும் நொடியெல்லாம்
சுட்டு உருத்தலாயிற்று!
இறக்கும் துளியெல்லாம்
பட்டு ,கண்ணில் கசியலாயிற்று!
துடிக்கின்ற அரும்பு மீசைக்காக,
உலகையே
துறக்கும் ஆசை கொண்டு
துச்சம்,
தூக்கிப் போட்ட அதட்டல்கள்
மிச்ச எச்சம்...!
தலையணைக்கடியில்
பருத்த மூட்டை,
விழிக்கும் போதெல்லாம்
பதுக்கி வைத்தெழுந்த...
யன்னல் திறப்பதெல்லாம்
விரித்திடத் தான் கனவை
மீண்டும் நான்!
துளைத்து வைத்திருந்தேன்
நிலவினைக் கனவினில்,
நுளைந்து நான் சென்று
உலவியே மீண்டு வந்தேன்!
இறங்கி வந்து,
துயில் எழ நான்
இதமான மலருக்குள் கிடந்தேன்...
தூவானம் குளிப்பாட்ட
இலை கொண்டு துவட்டிக்கொள்வேன்.
வானவில்லில் ஒப்பனைகள்.
மேகப்பஞ்சில் ஆடை கொண்டேன்.
வாழ்ந்து வந்தேன் ராஜ போகம்!
தேகமெல்லாம் மிதந்த காலம்!- அது
கனாக்காலம்!
மிதந்துகொண்டே வாழ்ந்துவிட்டேன்...
கனவினிலே ஆழ்ந்துவிட்டேன்!
கவிதை எல்லாம் கோர்த்து வைத்து
கனவுக்குள்ளே பொய்கை செய்தேன்!
மூழ்கி அதில் நான் மிதக்க
வாழ்க்கை எல்லாம் மறந்து போனேன்!
நாட்கள் நடக்க
நானும் கடந்தேன்...
கனவிலும் ஒரு பிரளயம்!
பருவம் மாறியது!
உலர்ந்தது கோடை வந்து!
வற்றிப் போன என்
வார்த்தைப் பொய்கை!
ஐயகோ...!!!
கனவுக்குள்ளும் விதிகள்
ஆளுமோ?
கவிதை குளமே வற்றும்
சாபமோ?
முடிச்சுப் போட்ட கவிதை
மூட்டைக்குள்
முக்கி முனகிய
கனவுக்கும்பல் எந்தன்!
யாருமே  காணாமல்,
யான் செய்த
யாகமிங்கு.
யாரெனை நம்புவார்
பாரென நானழுதால்?
பகல்க் கால உஷ்ணம்
முறுக்காமல்
திறந்து பாராமல்
மூடியே தான் வைத்தேன்.
தினம் யாமம்
முழுவதும் மூழ்கிக்கொண்டு  இரா
விடிய இதமாகத் தான் கண்டேன்.
உறைந்து கிடந்தது என் கனவு
மூட்டை.
நிறைந்து எழுந்த என் கற்பனைத் தீ
முட்டை!
என்
எண்ணப் பிரமாண்டம்!
எண்ணாப்  பிரமாணம்!
என் ஒற்றை ஓட்டு மூளைக்குள்ளே
எங்கெல்லாமோ ஓடப்பாய்ந்தது!
எப்படியும் எல்லையில்லை
என்றாகிப்போன
என் மூளை!
எஃகுறிக்கொண்டு
எழுந்து வெடித்த கனவு...!!
தலைக்குள்ளே விரிந்துகொண்ட
கனவு,
ஓர்நாள்...
காலாவதியே ஆகிப்போயிற்று!
ஓட்டை விழுந்து வெடித்துக்கொண்டே
கசிவுணர்ந்தேன் சிவந்த இரத்த!
ஒவ்வொன்றாய்
கனவுடைந்து...
ஓய்ந்து போன என்
கற்பனை மழை!


By ஷஹி ஸாதிக்



http://www.dinamani.com/specials/kavithaimani/2017/sep/10/சேர்த்து-வைத்த-கனவு--ஷஹி-ஸாதிக்-2770773.html


http://www.dinamani.com/specials/kavithaimani/2017/sep/10/சேர்த்து-வைத்த-கனவு--ஷஹி-ஸாதிக்-2770773.html

Tuesday 5 September 2017

நிலைக்கும் என்றே: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 03rd September 2017 05:04 PM  |   அ+அ அ-   |  
ஓடுகிறது நதி.
பிறக்கிறது நேரம்.
முளைக்கிறது வயது...
பாதை வெட்டிக்கொண்டு
சுயமாக.
எட்டிப்பிடிக்கப் பார்க்கிறது
துணிக்கை நீர்,
கடந்திட முன் காலத்தை.
கடத்திட முன் காலத்தை
முதிர்வினை
அடக்கிடப் பார்க்கும்
கனவு.
பருத்துப் போன கனவு
மூளைக்குள் முளைத்து,
முருக்கேறித் துளைக்கிறது,
யெளவனம் எழுந்து
துடிக்கிறது!!
அந்த
மத்திய இடைவெளியில்
மார்புகளின்...
வாய்க்குள் புகுந்த
சாத்தான்!
உள்ளிருந்து தப்பித்திடும்
முயற்சி.
இன்னும் இருக்கிறது என்றே
இழுத்துக்கொண்ட முன்னேறல்.
"இன்னும் இருக்கின்றது" என்றுகொண்டே
இலாஸ்டினைக் குத்தித் தவிக்கும்
உடலுக்குள் சாத்தான்.
கிழக்குக் கரைப் பிறப்பும்
மேற்குக் கரை இறப்பும்
பசுமைப் புரட்சி.
இருள்த் திரவத்துள்
சுருண்டு துடிக்கிறது
இதய அப்பிள்.
விட்டில் சுற்றியபடி
அள்ளித்திண்ணும் சாத்தான்.
"இன்னும் இருக்கிறது"...!
சதை வளர்க்கக் காலம்?
துவைத்து உலர்த்திட வெயில்?
சதை உரிஞ்சப்பட்டு
சிகப்புக் கழுவப்பட்டிருந்த என்
சுருண்டு போன இதயவுறுப்பு!
வேதம் ஓதுவதோ ,
சாத்தான்!!??
கரிய நாகத்துக்கு
பச்சை இரத்தினம்?
காதுக்குள் மெல்ல முணங்கும்
பருவம் கொல்லும் ஆசைக்
குரல்!!!
ஓதுகிறான் சாத்தான்...
நதி இன்னும்
ஓடியே முடியவில்லை;
நாழி இன்னும்
ஓய்வு எடுக்கவுமில்லை;
நரைக்காது உன்
ஓடா வயது,
நடை போடலாம் கொஞ்சம்
ஓய்வெடுத்து."
ஓதுகிறான் சாத்தான்...
இதயம் முழுக்க
இருட்டைப் பூசி,
உதயம் மறையா உலகமிதென்று
ஈன்று கொல்கிறான் கனவை!!!
"இன்னும் இருக்கின்றது " என்ற
ஜப மோட்சத்தால்...
முதிர்ந்து போன
கனாவுக்குள் கைகட்டி நிற்கையில்
உதிர்ந்து போயின -என்
காலங்கள்.
முரட்டுப் பிடியில்
இருக்கி மூடிய காதுகள்-இப்பொழுது
முணங்களுடன்
இழிந்து போயின!
உறத்துச் சொன்ன சாத்தான்
உயரப் பறந்தான்.
சாத்தான் மேலெழுந்தான்,
தூண்டில் கையில் கொண்டு.
சதை நாக்கில் கொக்கி குத்திட
தூண்டல் வரலாயிற்று மேலிருந்து...
இன்னும் இருக்கின்ற
இல்லாதிருப்பவைகளே மிச்சமாயின!
இன்னும் இருகிப் போனது இதயம்!
இனிமேல் , கதியே
"இல்லை"யென்றாகிப்போனது!
தொலைந்தே போனேன்...
என்
எண்ணம் மட்டும்
இன்னும் உள்ளே மீட்டிக்கொண்டது.
"நிலைக்கும்"என்கிற
நீண்ட பெருமூச்சு.