Sunday 26 November 2017

என் முதல்க் கனவு: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 26th November 2017 05:25 PM  |   அ+அ அ-   |  
கண் திறந்துகொண்ட
யெளவனன்,
வின் திறந்து பறக்க
யெத்தனித்த
கண் மறைத்த முதல்க் கனாவு
யென்-
மூச்சு 
முட்ட
கிறுக்கப்பட்ட 
புத்தகங்கள் பாவம்!
கிள்ளி எடுத்து உயிர்ப் பறித்த
பூக்களும் தான் பாவம்!
கனவை எழுதக்
கரைந்து போன
எழுதுகோல்கள்
ஏராளம்!
கடித்துக் கொறித்து
பதற்றம் தணித்த
ஒடிந்த விரல் நகங்கள்-என்
பதினெட்டைப் 
பதம் பார்த்திருந்தது
இராப்
பூத்த கானல் நெருங்கி
வராமல்!
அந்தோ,
சூரியன் பிழிந்தெடுத்து
வந்தே 
ஆறிடக் குடித்துவிட்டு,
இந்த
வானத்தை மடித்துப் போட்டு-மி-
தந்த
வான்மேகம் தலைக்கெடுத்து
இந்தப் 
பூலோகப் பூதங்கள் சேர்த்து
நந்த வனமெல்லாம்
பூட்டுப் போட்டு
எந்தன் கனாவின் உயிர்ப்
புனைந்தேன்!
பூத்த புதுக்
கினா
புதைத்த சாலைகள் பல
வினா!
யதார்த்தம் கடனெடுத்து
பதார்த்தம் புதிதாய் இணைத்து
யுகமெல்லாம் மைகொண்டு
பதனிட்டு,
யுத்தத்தின் தூசி கொண்டு 
வீரத்தின் நாசி கொய்து
சத்தத்தின் பேச்சு பிடித்து
முத்தத்தில் வீச்சு கணித்து
மொத்ததில் பீய்ச்சிய கனா!
என்
யெளவனக் கொடியில்
எண்ணில்லா மலர்கள்!
யெகமெல்லாம் மிதக்கச்செய்து
அகமிரண்டும் ஒன்றிக்க
நேரம் கெதாயுவானாலும்
முகமிரண்டும் ஒன்றாகிப்போன
தூரத்தில் கனா,
காலத்தில்ப் பொருத்திப் பார்க்க
தூரிகையில் மை மறந்தேன்!

ரத்தத்தில் பூக்கின்ற

றக்கை கொண்ட பூக்கள்,
இம்
மாசி நூவணிந்து

மை மறைத்த கனா!
இஞ்ஞானம் பெற்று
ஒரு
இச்சையுள் புத்தன்,
கிடந்தவிடம்
மணமல்லிகை மரம்.
விடக்காந்தருவ 
மனம் 
விடாது பிடித்த முதல்க்
கனா!
மாயை மலர்
மலர்ந்து
மார்பினில் மகரந்தம்
உரைந்து
கேசாதிபாதம் நகர்ந்த
உருளை வண்டுப்
பார்வைக்கூர்முள் 
பாதை  வழி 
பார்க்க
பாதம் மிதக்க
பால்யம் மிகைத்த
எதிர்பார்ப்புக் கருவி அது!
கண் திறந்து 
கண்டுகொண்டு
கண்ணை மறந்து
உன்னை வரைந்து
மின்னல்கள் பிடித்து 
வண்ணம் தீட்டி
புண்ணில்லாமல் வடித்த
உன் உருவம்!
கண்ணிலேவைத்திருந்த
கவிதையெல்லாம் 
கோர்த்து அணிவிக்க
மாலையானது.
கோர்த்து வைத்த 
வார்த்தையெல்லாம்
சோர்ந்து போய்க் 
கனாவைக் கடக்காமல்!
இந்திய வங்காள
எல்லை போல
எந்தனொரு மொழி
எட்டிப் பார்த்தது!
சருகுகள் 
சரசரப்பில்
சலைக்காமல் உன்
பாதத் தேடல்.
சுகந்தங்கள் 
சஞ்சரித்தால்
சுந்தரத்தின் 
சன்னிதி கோரல்.
இன்னிசை 
பாவிசைத்தால்
இன்பவள்
கண்ணசைதலோ பாடல்?
என ,
எண்ணியே
என்னகக் காதல்!
முதல்க் கனா
முற்றிப் போக,
இதழெலாம் 
இற்றைக்கும்
மிதக்கின்ற
மிறைக்கா 
மித்தைக் கனா!
என்றுமே
உருவம்
ஊன்றவில்லை!
உயிரென
எதுவும் 
தோன்றவில்லை!

Tuesday 21 November 2017

யாருமில்லாத மேடையில்.

முதன் முதலாய்...
ஒரு
காற்றலை எய்தினேன்!
முழுக்க நனைந்து
நான்
அழுத்தமாய்ப் பாடவே...
ஒரு
பகல்க் கனாவில்
சிறு இராபொழுதெய்தியே...
நிஜக் கனாவில்
சிதாரா...?
ஒரு
புதுப் புன்னகை
சிரிக்கிறது!
அதே
மேடையில்ப் புது
அலைகள்
மேய்ந்தன!
"யாருக்காக நிற்பதோ?"
அந்தக் குரல்கள்
கடந்து
அறுந்து போகக்
கிடந்த
அந்தரக் கடவை...!
இருளிலும் வெள்கி
குறுகி
இழிவிலே மூழ்கடித்த
புழுதியுள்
இரகசியப் பா செய்தேன்...
எனக்கே
கேட்காமல் போன
என்குரல்
தொண்டைக்குள்!
உலகை
எட்டிப் பார்க்கம்முன்னே
குழந்தை
முடக்கப்பட்டதாய்!- என்
குரலைத்
தொலைந்துவிட்ட...
காற்றுத் தடுக்கப்பட்ட
புல்லாங்குழல் !
நான் ,
முதுகுகள் மதிலிட
முக்காடிட்டிருந்த
படர் பெருமூச்சு!
ஒரு
ஈரமேனும் எதிர்பார்த்திருந்தது
என்
குரல்வளை...
நான்
ஏரியிருந்த மேடையில்
கண் மூடிக் காத்திருந்த
ஏக்கம்...
உயர்த்தி வைத்திருந்த
நான்
என்னை,
நாளை உதயமாகும்
என...
எப்பக்கம்
திரும்பினாலும்
என் கை மட்டுமே
திரும்பி வந்திடும்,
ஏதுமே இல்லா
தனிமை மேடையில்...
ஒரு
புது விதி
அவதரித்தால் என்ற
புதிர் மெளன
நப்பாசை...
ஒரு
சண்டமாருத
சலன
அலையிலே...
நான்,
பாடலானேன்...
என்
காதுகளேனும்
கேலாதோவென!
எனக்கே
இனித்த
என் குரல்.
இன்னும் அலைகளும்
கூடிக்கொண்ட சுகம்!
நானும் காற்றும்
கலந்துவிட்டோம்!
நானும் காற்றும்
மேடையில்...
யாருமில்லாத
மேடையில்.
ஷஹி ஸாதிக்

Sunday 12 November 2017

உன் குரல் கேட்டால்: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 12th November 2017 03:45 PM  |   அ+அ அ-   |  
என்
காத்திருப்பு...
ஒரு
பொப்பிப் புதர்
இரத்தம் குடித்து
எழ முன்னே,
புது
மலர் வனம்,
மனதெல்லாம்
முளைத்திடும்
மழைக்காலத் தேடல் ஒன்று...
ஆலயமெல்லாம்
அரக்கர்களைப் பலியிட்டு
ஆலாபனைகள்
அன்பினை ஊட்டல் கொண்டு!
இன்னும் பல
அபிலாஷை ஆவளிகள்
கொண்டு...
எங்கள்
சிறைக் கூண்டுகள்.
சிதைக்கப்படும் சுதந்திர
சிந்தனைகளுள்!
தாகச்
சிறைக்குள்
கைப்பற்றிய
சிந்தைக்
கோடைகள்!
ஒரு
புது வனம் அமைத்துக்
குயில்க் குரல்
படைக்க
வசந்தங்கள்
விடை கொடுக்கும்...
மீண்டும் பூக்குமா?
இந்த,
கம்பி எலும்புகளும்
சீமெந்து சதைகளும்
கடித்துத் திண்ற
சில்லென்ற பசுமைகள்...
முள்ளுக்குப் பதில்
வேலி பூத்த
உளிக் கம்பி!
நீ
பாடும்போதேனும்
புற்றரை
படராதோ?
குகனே...!
வசந்தங்கள்
வாசல் மிதிக்காத
நகர
நாகரிகம்,-உன்
கூவலில்
தளிர்க்காதோ?
கடுதாசிப்
கடிதம் படிக்கும்
அன்றைய
சித்திரைகள்,
இலத்திரன் வந்து
சிதைத்த மிதக்கின்ற
பழைய நினைவுகள்...
இன்னுமொரு
வசந்தம்,
இந்தப் போலியெல்லாம்
கலைக்கக் கேட்டேன்!
நீ
பாடும் திசை ஆய்ந்து
பழைமை ஒன்றைப்
புதிதாய்ச் செய்து,
பருவம் மீண்டும்
உருவமைக்கும்
பசுமை வசந்தம்
நான் அமைப்பேன்...
ஆனால்,
குயிலுக்கும் விடுமுறை
ஆயிற்றோ
கூகுளின் செயற்கையால்?

Tuesday 7 November 2017

மேகத்தில் கரைந்த நிலா: -ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 06th November 2017 03:50 PM  |   அ+அ அ-   |  
இரவின் சாவியைத் தொலைத்துவிட்ட
வானம்.
தடவலில் நெகிழ்ந்த காற்று...
மேகத்தின் மோகம்
தேகம் பட,
வெண்ணிலா!
நேராய் நின்றபோதும்
தேயவில்லை சூரியனோடும்!
ஆனால்...
உஷ்ணமும்
உருக்கா என் தேகம்!
ஒரு
உரசலில் கரைந்ததன்
அர்த்தம் ஏதோ?
ஒரு நொடி,
பனியாகிவிட்டேன்!
மனம்
பிணி ஆட்கொண்டு,
பலியாகிவிட்டேன்...
இனி ,
உருகியே
உனதாகிவிட்டேன்!
இளம் இன்பமே
முற்றலில்
தினம் வேண்டும் என்று!
கணம் கணமாய்
ஒழிந்துகொண்டு
நாணம்
நான் பெற்றேன்!
என்
ஆவி பிரிந்து
இருளோடு கலந்து,
இரவோடு உனைக்கான
முழுதாக மறைந்து.
இரவாக நானாகி
உரவாட வந்தேன்.
நீ சேய்மை...
சில நாழி
நீ படரும் குஷி!
தினம் இருந்த
தியானம்
திடீரெனக் கலைந்திட,
திருத்தப்படா
ஒரு
மறு
உருப்பெற்று நாமாகி!
நீ மஞ்சு!
நான் நிலா,
நாம் பனியாகிவிட்டோம்!
தாபத்தால் உருகி,
சேய்மையின் கொடுமை
தாகித்த இயற்கை...
நீ
குளிர்த் தீ!
நீ போர்த்திவிடும் போது
நான் உருகியே
போனேன்...
என்
தவம் கலைந்தது!
மோட்சம் அருந்தாலும்
குண்டலிணி
தாக்கிட
வெண்ணிலவும் நிறம் மாறுமோ?
ஒரு புயல்-என்
கூந்தல் கலைத்தது!
ஆனாலும்
நானிருந்தேன்.
அந்த
மஞ்சு சாம்ராஜ்யம்.
எந்தன்
தேகம் தாக்கிய மின்னல்
கந்து!
ஒரு
நொடி இறந்து உயிர்த்த
உன் மடி.
மறு நொடி
இனித்துவிட்டேன்...
சர்க்கரையாகிவிட்டிருந்த
என் யாமம்.
கரைத்துச் சுவைத்த
மேகம்...
ஒரே இரவு!
ஒரே யாமம்!
பல பருவம்
ஒரு நாளில்.
நடு இரவிலேயே
கரைந்து தீர்த்து
நனைந்து போன
பூமி சாட்சி!
அந்த மேகன்,
நனைந்த
மந்த யாமத்தில்
அனைந்து போன
எந்தன் ஒளி...
கரைந்துகொண்டே
அணைந்த அந்த
நாள்!
உருகியே நீயாகி,
புவியிலே
பனியாகி
உன்னிலே நானாக
உயர்ந்துனில் நான் சேர...
மருபடி அவதரித்தேன்!
நீ தந்த
முயற்கறை இன்னும்
நீங்காத
வள்ளுறை தோய்த்தாலும்
வின்னை...