யாருமில்லாத மேடையில்.
முதன் முதலாய்...
ஒரு
காற்றலை எய்தினேன்!
ஒரு
காற்றலை எய்தினேன்!
முழுக்க நனைந்து
நான்
அழுத்தமாய்ப் பாடவே...
நான்
அழுத்தமாய்ப் பாடவே...
ஒரு
பகல்க் கனாவில்
சிறு இராபொழுதெய்தியே...
நிஜக் கனாவில்
சிதாரா...?
பகல்க் கனாவில்
சிறு இராபொழுதெய்தியே...
நிஜக் கனாவில்
சிதாரா...?
ஒரு
புதுப் புன்னகை
சிரிக்கிறது!
புதுப் புன்னகை
சிரிக்கிறது!
அதே
மேடையில்ப் புது
அலைகள்
மேய்ந்தன!
மேடையில்ப் புது
அலைகள்
மேய்ந்தன!
"யாருக்காக நிற்பதோ?"
அந்தக் குரல்கள்
கடந்து
அறுந்து போகக்
கிடந்த
அந்தரக் கடவை...!
கடந்து
அறுந்து போகக்
கிடந்த
அந்தரக் கடவை...!
இருளிலும் வெள்கி
குறுகி
இழிவிலே மூழ்கடித்த
புழுதியுள்
இரகசியப் பா செய்தேன்...
குறுகி
இழிவிலே மூழ்கடித்த
புழுதியுள்
இரகசியப் பா செய்தேன்...
எனக்கே
கேட்காமல் போன
என்குரல்
தொண்டைக்குள்!
கேட்காமல் போன
என்குரல்
தொண்டைக்குள்!
உலகை
எட்டிப் பார்க்கம்முன்னே
குழந்தை
முடக்கப்பட்டதாய்!- என்
குரலைத்
தொலைந்துவிட்ட...
காற்றுத் தடுக்கப்பட்ட
புல்லாங்குழல் !
எட்டிப் பார்க்கம்முன்னே
குழந்தை
முடக்கப்பட்டதாய்!- என்
குரலைத்
தொலைந்துவிட்ட...
காற்றுத் தடுக்கப்பட்ட
புல்லாங்குழல் !
நான் ,
முதுகுகள் மதிலிட
முக்காடிட்டிருந்த
படர் பெருமூச்சு!
முதுகுகள் மதிலிட
முக்காடிட்டிருந்த
படர் பெருமூச்சு!
ஒரு
ஈரமேனும் எதிர்பார்த்திருந்தது
என்
குரல்வளை...
ஈரமேனும் எதிர்பார்த்திருந்தது
என்
குரல்வளை...
நான்
ஏரியிருந்த மேடையில்
கண் மூடிக் காத்திருந்த
ஏக்கம்...
ஏரியிருந்த மேடையில்
கண் மூடிக் காத்திருந்த
ஏக்கம்...
உயர்த்தி வைத்திருந்த
நான்
என்னை,
நாளை உதயமாகும்
என...
நான்
என்னை,
நாளை உதயமாகும்
என...
எப்பக்கம்
திரும்பினாலும்
என் கை மட்டுமே
திரும்பி வந்திடும்,
ஏதுமே இல்லா
தனிமை மேடையில்...
திரும்பினாலும்
என் கை மட்டுமே
திரும்பி வந்திடும்,
ஏதுமே இல்லா
தனிமை மேடையில்...
ஒரு
புது விதி
அவதரித்தால் என்ற
புதிர் மெளன
நப்பாசை...
புது விதி
அவதரித்தால் என்ற
புதிர் மெளன
நப்பாசை...
ஒரு
சண்டமாருத
சலன
அலையிலே...
சண்டமாருத
சலன
அலையிலே...
நான்,
பாடலானேன்...
என்
காதுகளேனும்
கேலாதோவென!
பாடலானேன்...
என்
காதுகளேனும்
கேலாதோவென!
எனக்கே
இனித்த
என் குரல்.
இன்னும் அலைகளும்
கூடிக்கொண்ட சுகம்!
இனித்த
என் குரல்.
இன்னும் அலைகளும்
கூடிக்கொண்ட சுகம்!
நானும் காற்றும்
கலந்துவிட்டோம்!
நானும் காற்றும்
மேடையில்...
யாருமில்லாத
மேடையில்.
கலந்துவிட்டோம்!
நானும் காற்றும்
மேடையில்...
யாருமில்லாத
மேடையில்.
ஷஹி ஸாதிக்
No comments:
Post a Comment