Tuesday 29 August 2017

கண்ணால் காண்பதும்: -ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 27th August 2017 03:44 PM  |   அ+அ அ-   |  
காண்பவை மாறிடும்;
மீண்டிடும், மாட்டிக்கொண்ட
மின்னலின் வானத்தில்...
காட்சிக்குள்
ஆட்சி செய்கிற
காஞ்சனை
கானலாக...
காற்றின் கீரலில்
கசியும் காட்சிகள்...
மழுங்கலற சிறையுள்.
வண்ணம் கசிகின்ற
கண்மணி !
வண்ணம் கசிந்து,
வண்ணம் கசிந்து
கண்மணி கசிந்து
வண்ணம் நசிய!!
உரு மாறி ,
உறு மாரி கண்ணில்...
உரு மாறிய
உயிர்க் காதல்
உளரலாய் என்னுள்!!
உதிர்த்து சென்ற -அவள்
உயிர்த்தடம் காண்கின்றேன்...!!!
உருவம் கடத்திக்கொண்ட
ஏமாற்றத்தில் அவள் சரணம்.
அருவம் ஆகிப்போனது
ஏகாந்தம் பூத்த -என்
மலர் வனம்....
கண்களில் மலர்களுக்கு
நிறக் குறிப்பில்லை.
காண என் வனத்தில் மலரும்
பிறக்கவில்லை !
நிறப் பூச்சிகள்
நித்தம் பறந்த -நான்
போக்கிய பொழுதுகள்;
சத்தம் இல்லாமல்
போர்த்தப்பட்டன.
அவள்
சரித்து வீழ்த்திய
மணல் மாளிகை.
திரும்பியே பார்க்காத
நெருங்கியிருந்த
திவ்விய தருணங்கள்;
திருடிச் சென்றவள்
திரும்ப என் கண்களில்!!!
வண்ணம் இழந்த
இரு கண்களிலும்
இன்னும் காண்பதும்
மின்னும் அவள் முகம்...
வண்ணமிழந்து
வடிவம் சரிந்த,
கண்களுக்குள்
படிவம்...
என்
காபன் கக்கும்
கண்ணின்
தபித்தலின் காட்சி!!!

Monday 21 August 2017

என்ன தவம் செய்தேன்: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 20th August 2017 06:16 PM  |   அ+அ அ-   |  
உள்ளமெலாம் ஆளும்
செல்லம் உனை காணும்
செல்வமதை ஆழ
செய்ததென்ன தவம் நான்?
வண்ண மலர்
வாடும்
கண்கள் அலர்
காலம்
உன்னை மலர்,
நானும்
என்னில் நுதல்
சாயும்
கண்மணி என்
நீயும்,
கலந்த நாழி
பேறும்!
மிதக்கும் அன்பில்
நடக்கிறோமே,
எத்தவத்தில் பிறந்த வர
மிதன்பே?
நுரைக்கும் இதயம்
இணைக்கும் எங்கள்
நரைக்காத ஆத்ம பாசம்
இரைஞ்சாமல் பெற்ற
இன்பம் , என்ன் செய்வேன்??
மயக்கமுற்றேன்!
தொலை தூரம்
தொடும் பாசம்
விலை இல்லா
விரி    பவளம்
அது -ஒரு
திருப் பாற்க்கடல்!
தினம் உண்டாலும்
தித்திப்பு மாறாது,
திண்டாட்ட மயக்கம்...
நனைந்துகொண்ட குளிரில்
நலுவிடாமல் பிடித்துக்கொண்டேன்
பழமே!
மழை உன்னைக் கரைத்துவிட்டால்
மரித்துப் போகுமென்றது -என்
சுவாசக்குழல்!
குடிக்கும் ஒவ்வோர்
சொட்டும்
கடந்திடாது மிதிக்காமல்
என்
காதல் நரம்பை!
கவிதையின் சிறப்பணி நீ!
ஆனந்த மழலை
இராகம்,
ஆகாய நிலவின்
உலாபோல்,
வாடாத மலருன்
வதனம்;
தீராத அன்பில்
புரலும்
திவ்வியக் கட்டில் -நீ
எனக்கு...

Thursday 10 August 2017




கடல்ப் பயணம்: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 07th August 2017 06:46 PM  |   அ+அ அ-   |  
நீருக்குள் மூழ்கிய
வானத்து நெற்றிச்சுட்டி,
நீரலை மோதியே மிதந்திடும்
கன்னிப் பந்து.
ஏரிடும் நேரம் பார்த்து
எகிரிடும் மீனினம் வெல்ல!
இடாகினி ஓடும்
இருட்டிலே என் பயணம்.
தொலைவினைத் தொட்டிடும்
தொலையாத எண்ணம் கொண்டு,
தொடர்ந்திடச் செல்வது
தொலைத்திடும் வளாவிய  கடலிது.
கூவிளி இல்லா
கானல் ஓசைகள்,
குரல்களே மறந்திடும்
கடல்ப் பயண நாட்கள்...
செகிளெனக் குத்தும்
சுக்கானில் பல ஆணி,
வற்றாத கடல்ப் போல
முக்குளிக்கும் ஜீவனப் போர்!
முத்துக்குளிப்பில் முறிந்து செல்லும்
மூச்சுக் குழாய்களும்,
பவளப்பாறையில் படிந்தே தோற்ற
மூத்தவர் பந்தமும்,
நேற்றினை எண்ணியே
தோற்றிடாமல் கடல்ப் பயணம்...
சல்லியைத் தெப்பமாக்கி
செல்லுகின்ற பாதை மறித்து,
சல்லி வேர்கள் மூச்சு விட
செம்போக்குப் போன கம்பலை!
சென்று வரும் சேதி சொல்லா
செரித்துப் போன வாழ்க்கையுமுண்டு!
"செல்லாதே !"-என்று
சொல்லா செய்கையில் ,
சேலையில் கண்மறைக்கும்
செல்லாமை.
சேடி! சொல்லும்
சேதி கேட்க
சேட்பட்டவன் திரும்புவானோ?
வலையின் ஓட்டை
வயிற்றை வகித்தலாலோ,
விலையின் சாட்டை
வினயம் காட்டுதந்தோ!
கடலில் மிதந்து செல்லும்
உடலில்  மிரட்டும் தாபம்,
குடலில் நுரைத்துத் தள்ளும்
ஊமைத் துன்பங்கள் -என
தொடலாய்த் தொடர்கின்ற
எசம் இல்லா விதி நமக்கு!

Tuesday 1 August 2017

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம் By கவிதைமணி | Published on : 31st Jul

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்

By கவிதைமணி  |   Published on : 31st July 2017 07:07 PM  |   அ+அ அ-   |  



அந்த
ஆன்மாவின் ஓட்டம்!
அலைகளைக் கிழித்துக்கொண்டு,
அதிர்வுகளை அருகில் கொண்டு.
புள்ளியாய் மாறிய
சூன்யத்தின் தூண்டல் அது.
புதுமையில் ஒரு
புறப்படல் கண்டது என்று.
இருள் வெல்லும்- அந்த
இராட்சத வேட்கை!
ஒளியாண்டு சாகரத்தில்
ஒரு புள்ளி.
உயிருக்குள் சுரக்கின்ற
உதிரத்தின்  சங்கிலிகள்,
உயிர் என்ற பரிணாமம்
உயர் மின்னில் செய்ததவன்.
இறைவன் விடுத்தான்.
உயிர்த் துளிக்குள்
அரவம் இல்லா ஏவுகணை.
ஒரு ஒளி பிறக்கும்
சிறு நாழிகை அது.
ஓர்
இருள்க் காட்டில்
ஒளிக்குவிப்பு,
விரிந்துகொண்டே
செல்கின்ற போதும்...
உஷ்ணம் ஏற்றப்படும்
பிரபஞ்சக் கருவறைக்குள்.
பிண்டமல்ல!,
உயிர்க் குழந்தை.
ஆம்!
உயிர்த் தான் ;
துளியில்
தளிர்க்கும் ,
வெளியெல்லாம்
பறந்த
ஒளி!
shahi sadique