Tuesday, 1 August 2017

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம் By கவிதைமணி | Published on : 31st Jul

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்

By கவிதைமணி  |   Published on : 31st July 2017 07:07 PM  |   அ+அ அ-   |  



அந்த
ஆன்மாவின் ஓட்டம்!
அலைகளைக் கிழித்துக்கொண்டு,
அதிர்வுகளை அருகில் கொண்டு.
புள்ளியாய் மாறிய
சூன்யத்தின் தூண்டல் அது.
புதுமையில் ஒரு
புறப்படல் கண்டது என்று.
இருள் வெல்லும்- அந்த
இராட்சத வேட்கை!
ஒளியாண்டு சாகரத்தில்
ஒரு புள்ளி.
உயிருக்குள் சுரக்கின்ற
உதிரத்தின்  சங்கிலிகள்,
உயிர் என்ற பரிணாமம்
உயர் மின்னில் செய்ததவன்.
இறைவன் விடுத்தான்.
உயிர்த் துளிக்குள்
அரவம் இல்லா ஏவுகணை.
ஒரு ஒளி பிறக்கும்
சிறு நாழிகை அது.
ஓர்
இருள்க் காட்டில்
ஒளிக்குவிப்பு,
விரிந்துகொண்டே
செல்கின்ற போதும்...
உஷ்ணம் ஏற்றப்படும்
பிரபஞ்சக் கருவறைக்குள்.
பிண்டமல்ல!,
உயிர்க் குழந்தை.
ஆம்!
உயிர்த் தான் ;
துளியில்
தளிர்க்கும் ,
வெளியெல்லாம்
பறந்த
ஒளி!
shahi sadique

No comments:

Post a Comment