Monday 24 July 2017

தூரத்தில் கேட்குது: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 24th July 2017 05:05 PM  |   அ+அ அ-   |  





கற்றை ஆள்  காதுகளில்
கத்திச்  செல்லும் பன்மொழி;
தொற்றிக்கொண்ட தலையணி,
தவறுதலாக,
கேட்ட இராகம் மாறிப் போக...
தரை முதல் கடல் வரை
விட்ட இரைச்சல் காதில் கேட்க!
தூரத்தே கேட்கிறது!
தூங்காத இரவில்
தாங்காத ஒரு ஓலம்!
இயற்கையின்
இசையமைப்பில்
இரவில் ஒரு கச்சேரி...
பசித்த குழந்தையின்
ருசிக்கும் எண்ண அழுகை.
துடிதுடிக்கும் காதலனின்
அடி அடிக்கும் -இருதயத்
துடிப்பு!
தூரத்தே கேட்கின்ற
ஆள்க்காட்டி பரிதவிப்பு!
ஓய்ந்திடாது கேட்பவைகள்
வாய்திறந்த இயற்கை
ஓசைகள்...
காதின்
நழுவிப் போன தலையணி,
காதை அடைத்த பின் தான்
நாதம் ஒலித்தது!
செயற்கை
நனைக்கும் கடதாசிச்
செவிக்குள்...!

Tuesday 18 July 2017

இன்றைய தாலாட்டு


இன்றைய தாலாட்டு: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 17th July 2017 05:15 PM  |   அ+அ அ-   |  


ஆராரோ, ஆரிவரோ...
அன்றைய குழந்தைக்கு.
அறவைக் குழந்தைக்கு எம்.பி.திரீ
இன்றைய தாலாட்டு!
தாயாரோ வீட்டிலில்லை.
தடுமாறும் குழந்தைக்கு,
வாயாரத் தாலாட்ட அன்னைக்கு
கெடுவுமில்லை!?
தூக்கமின்றி ஓடுகின்ற
உலகமதன்
தாக்கமிதோ?
உரக்கம் கெட்டு அழுகின்ற போதும்
மறந்துவிட்டால், குழந்தை என்று?
தால் தொடாத சொல்லாலே
நாள் ஓடும் அவசரத்தில்,
தான் ஓடும் பரபரப்பில்,
தாலாட்டும் தடுக்கிப் போக!
தாயிருந்தும் அநாதைத் தூக்கம்,
தான்  பெற்ற தொழில்நுட்பம்
தாராளம் பாடினாலும்,
தாயாகும் தரமதற்கு
தாழ்வன்றோ?
தாய்மையே!!!  

Wednesday 12 July 2017

நிழலாடும் நினைவு

நிழலாடும் நினைவு: ஷாஹி சதீக்

By கவிதைமணி  |   Published on : 10th July 2017 04:04 PM  |   அ+அ அ-   |  
உறக்க தேசத்திலும்
உரக்க ஓர் இன்னிசையாக!
உருக்கிடும் வலி,
உயிர்க்கொல்லும்
உளி!
உன் நினைப்பினில் விழி.
என் இணைப்பிலே பிணி!
கண் இமைகளே !
வின் அனைத்திலும் அவள்
மண் நிலத்திலும் ,
தொடர்.
கண் படா அடாத காலம்
கண் மடல் தான் அவள்!
கண்ணீரின் வேலியாக
கருத்தரிப்பாள் அவள்.
என்னுள்ளே புள்ளரிப்பு,
எதிர்பாரா தித்திப்பு ,
மின் பாயும் இதயப் பூ, - எல்லாமே
மிதமிஞ்சிய உன் நினைப்பு!
உருவமாக அருவமாக
துருவமெல்லாம் இருப்பவள் நீ!
உதிரமாக புகுந்து என்னுள்
பதிந்த பிம்பம்
பழகிப் போக
விழுந்த நிழலும் நீயாக,
விழியும் நினைப்பும் நீயாக!



நூல்

   நூல்


  நூல் ! அது
  பாசக்கயிறு.
  பட்டுப்பூச்சியின் கழுத்தைக்
  கட்டிய இயமனின் கயிறு.

  வர்ணம் பல வெளிப்படையாய் -கரும்
   இருட்டின் நிறம் அதன் கண்ணில்!
  நெய்தலின் ஓசை  - ஒரு
  உயிர் பிரியும் வலியின் ஓலம்!

  உருக்கலில் அதன் கொதிப்பு,
  ஊனமுறும் மனிதம் அங்கு!
  உதிரம் இல்லாக் கொலையாகலாம்!
  உடுத்தும்
  உடையெல்லாம் அதன் பிரேதம்!

  ஒரு
  உயிரின் வலி துடைக்கப்படாமல்,
  தொடர்கின்ற  பலியிடல்கள்!

Tuesday 11 July 2017

உனக்காக...

உனக்காக



ஓராயிரம்
ஜன்னல்கள் இருக்கட்டுமே -தினம்
உன் முகம் பார்த்திட சுவரினிலே.
ஊரெல்லாம் பூக்கள் பூக்கட்டுமே,
உனக்காக மாலைகள் கோர்த்திடுவேன்.

நெடும் பாதையில் உனக்காய் காத்திருப்பேன்,
படும் வெயிலினை நிழலாய் நான் தடுப்பேன்.



ரோஜாவைக் கொஞ்சிடும் உன்னை
முள் குத்த முற்படும் போது, கையால் நான் மறைத்திடுவேன்,வலி
 கூடப் பொருத்திடுவேன்.

  உனக்காக நான் இருப்பேன்,
 உனக்காகவே இறப்பேன்.
  உதிரம் தான் தரக் கேட்டால்
 அதிலும் நான் தந்திடுவேன்.

 உயிரே உன் முகம் பார்த்து
 உயிர்த் துரந்தும் வாழ்ந்திடுவேன்.



Monday 10 July 2017

தனிமையில்

  தனிமையில்

 இருளின் கருப்புத் தேய்த்து வைத்த மேனி,
 பருவம் துளைத்து விளையாடும் இரவின் தனிமை.

  இடைக்கிடை படரும் இருதயப் படபடப்பு!
  கிட்ட வந்து தடவிச் செல்கிறது நீல மின்னல்.
  தொடர்கின்ற ஜாமத்தில் தனிமைப் போட்டி.
  வானத்தில் வானியும் வான் பார்த்த நானும் தனிமையில்.

வாசலோரக் காத்திருப்பில் யாரோ வருவார் போல்,
ஊசலாடும் உள்ளகப் புல்லரிப்பு!
ஏதோ ஒரு ஏமாந்த ஏக்கம்!
எங்கோ செல்கின்ற நெஞ்சத் தேடல்,
சடலம் ஒன்றிங்கு உஷ்ணம் காயாமல்!

வரண்டு போன தொண்டை நரம்புகளில்
என்றுமே ஈரம் சுரக்காதோ என!
தோற்றுப் போன கனவுகளின் யாமம்.

மறந்தே போய்விட்ட எழுந்து நிட்கும் உரோம அணிநடைக்குள்,
உராய்ந்து செல்கின்ற இளமையின் மின்சாரம்.
தனிமையில் பற்றிக்கொண்டது,
உயிருக்குள் சிக்கிக்கொண்ட ஒரு புது இரத்தத் துணிக்கை,
நாடிகளில் .....


ஒற்றையடிப் பாதையில்,ஒற்றையாய் இராத்திரியில்..



ஒற்றையடிப் பாதையில்,ஒற்றையாய் இராத்திரியில்..



 இராக்கால ஊது குழலின்
  பாஷை என்னவாம்?
  இசையினில் கலந்து வரும்
   வேதல் சொல்வதாம்!

  நிலாக் காயும்
  நிசப்த இரவின்  ஓரம் ஒன்றிலே,
  நுழைந்து நாணல்
  மேய்ந்து வரும் காற்றின் வழியிலே...

 ஆற்றங்கரை ஆலமர விசிரும் இலையிலே,
 ஆயிரமாம் இரைச்சல் ஒலி நிசப்த இரவிலே!

 பழுதுபட்ட பொழுது தாண்டி பயணப்படுகையில் ,
 அழுது பாடும் ஓசை ஒன்று
 அடுத்த நொடியிலே!

படுத்துப் போன பிணங்கள் எல்லாம்
எழுந்து வருவதோ?
பனியில் ஊரிய  பாதை எங்கும்
ஊசலாடுது.

இன்னும் கேற்கும் பாடலொன்று
 என்னுள் தேடிடும் ராகம்.
 என்னுள் ஆடும் இதயம் போடுது
 போட்டி போட்டு புது ராகம்.

ஒரு தொலைவு தேசம்.

  ஒரு தொலைவு தேசம்.


  பல வைர ஆறுகள்,
  சில தங்க ஊற்றுகள்,
  வழி மரிக்கும் மலர் வாகை,
  நீயிருக்கும் தொலைவு தேசம்.

 அடர்ந்த கவிதைக் காடது.
 கிளைகளெல்லாம் தூரிகை பிடித்திருக்க
 இலைகளெல்லாம் காகிதமாகிவிடும்.
 கிறுக்கப்படும் ஓவியம் நீதான்!

பனித்துளி காற்றினில் கலந்து வந்து
பகிர்ந்திடும் கத்தூரி சுவாசம்.
பறவைகள் விரித்திடும் சிறகினில்
பகலெலாம் உன் நிழல் பேசும்.

பெயரில்லாப் பெரும் காடு உந்தன்
பெயராலே உயிர் வாழும்.
 உயிரில்லா நெடும் தூரம் நீ நடக்க
 உஷ்ணம் பெறும்.

ஒரு சில மீட்டர் தூரம் எனக்கு
ஊர் பல தாண்டும் கஷ்டக் கணக்கு!


Sunday 9 July 2017

பாரதி

  பாரதி.

  
 மீசைக்குள் தூரிகை வைத்தவன்.
 பாஷைக்குள் பாரினை சேர்த்தவன்.
கார்முகிலை சிட்பமாய் வடித்தவன், 
 நார் வீணை பாடிடச் செய்தவன்.
துர் சாதி இல்லை என்று பறைத்தவன்.




ஆகாயம் எட்டிப் பார்க்க-ஏழை 
காயம் துடைத்தவன்.
ஆயிரத்தில் அவதரித்த 
தாயகத்தின் தமிழவன்.

நூலெல்லாம் நெய்தன பாடல்,
தீயெல்லாம் கொதித்திடும் புரட்சி,
மாரெல்லாம் வீங்கிடும் வீரம்,
ஊரெல்லாம் அவன்  வர வைத்தான்!

புதியதோர் கனவு கண்டான்,
நதியென பாடல் சொன்னான்.
பதித்திட தன் பெயரை -வரலாற்றில்
வதிந்து சென்றான்.

பாய்ந்து வரும் கவிதை ,
தாவி வரும் புரட்சி இவை
பாண்டித்தியம் காட்டித் தந்த
பாரதிக்கு சமர்ப்பணம்.







Saturday 8 July 2017

என் இறகு விரித்த காதல்

 

  என் இறகு விரித்த காதல்



ஒரு புயலென அவதரிப்பு.
   பெரு மூச்சின் பிரதிபலிப்பு,
   சிறு நேர அலைக்களிப்பு.
   ஒரு காதல் பிரசவிப்பு!
   உயிரோடு ஒரு தவிப்பு...
   துயிலாமல் வரும் நினைப்பு!
   
  உயிரில் ஒரு துகள் விழுந்து,
  துளைத்துச் செல்லும் ரோகம் இது!
  பயிராய் அது முளைத்து
  பருவம் கொல்லும் பாரம் இது!

 கையில் ஒரு சிறு சூரியன்
 பொத்திக் கொண்ட பேதை நான்.
 பையில் பல பகல்க் கனவுகள்
 குட்டி போடமயக்கம் தான்.

 கிளைகள் முளைத்த கைகள் -எந்தன் 
 காதல் தந்ததது  சத்தியம்!
 இலைகள்  முழுக்க உந்தன் பெயரை 
 இரேகை கொண்டது அம்மரம்.


Friday 7 July 2017

உனக்குள் நான்.

                 உனக்குள்  நான்.



நிலவறைக்குள் முயல்.
  உண்டா?இல்லையா?
   என்கிற,
   ஐயத்தின்
    மையப் புள்ளி.

  உனக்குள் இருக்கும் 'நான்'.
  முழுமையான
  நிலாவின் முயல்.

  இலட்சம் ஒளியாண்டு தொலைவு
 பெண் நெஞ்சம்!
   இராவுக் கனாவின் விளைவு 
 என் அஞ்சல்...

  தொல்லாயிரம் மைல் கடந்து,
  தொடுத்த என் விண் ஊர்த்திகள் சாட்சி!
  தொடவே முடியா கருந்துளை 
  தொட்டுவிட நான் பட்ட பாடு...!

  உடு விளக்கேற்றி,
  சுடு வெய்யில் கடந்து,
  முடிவுறாப் பயணம்...
  குறி நீ! -நான்
  முடிசூடும் கட்டளை -உன் 
  மூடி வைத்த உள்ளப் பெட்டிக்குள்.

  பல,
  கிரகணங்கள் மறைத்தன!
  சில வாள் வெள்ளிகள் துகள் கக்க.
  கண் மங்கிப் போனாலும்,
  பின் வாங்காமல் உனக்காய்!

 இலட்சம் கோடி ஒளியாண்டின் 
 காத்திருப்பு.
 இன்றாவது மூடிய நிலவின் யன்னல்
 திறக்கட்டுமே?

முதன் முதலாய்...

  முதன் முதலாய்...


  ஒரு சுவாசம்,
  ஒரு புன்னகை,
  ஒரு மெளனம்,



  முதன் முதலாய் நான் பார்த்த 
  இத சுவாசம்!
  முதன் முதலாய் நான் சிரித்த
  தித்திக்கும் புன்னகை!
   முதன் முதலாய் நான் சகித்த
   சுகமான மெளனம்!

   எல்லாமே ஒரு நொடி தான்.
    மனதுக்குள்,
     பூ மழையில் நனைந்துகொண்டு!

    சொல்லாத சந்திப்பு,
     சொட்டாத தேன்.
     ஒட்டிக்கொண்டு தரும் சுகத் தவிப்பு!
     
      ஒரே நொடி,
      ஒற்றைப் பார்வை,
       ஒரு ரோஜா -நான்
        திரு ராஜா!
      
         முதல் பார்வை அது...
        முத்துக்கள் தூவும் வேம்பு 
         மரத்தடி.
         ஜில்லென்று மெல்ல ஒரு காற்று.
         கொள்ளை போன எந்தன் பார்வை,-நான்
         களவாடியதோ, வெள்ளை ஓவியம்.

         திணர்ந்து போன மெளனம் எனக்குள்!
        திண்டியாக வார்த்தைக் கோர்வை,
        திருடப்பட்டது என் குரல்வளை!
        
        
       அமுதம் அருந்திய விழிகள் இன்னும்
       குமுதம் நில் என கேற்கத் தோற்றிட...-என்னை
       நகுதலாலே குத்திச் சென்ற
        பொகுவலாலே,
        நொடியில் களைந்தது பூ மழை.
     

குறிப்பு;திணர்தல்-இருகுதல்
   நகுதல்- பரிகசித்தல்
   பொகுவல்-ஒரு பறவை
   திண்டி-பருமன் கொண்ட/பிரமாண்ட
       
   

Thursday 6 July 2017

திரையுள் ஒழிந்த நீ...

திரையுள் ஒழிந்த நீ...


  தொடாமல் தொடும்
  வானம் நீ.
   தொடுகின்ற போது,
   விடாமல் விட்டுச் செல்கிறாய்;
   மேகம் நீ!
    

  நிலாவில் படும் ஒளி
  நீ!
  தரிசித்தால் ஒளி மங்கப்
  போர்த்திக்கொள்கிறாய்,
  அடி நீ!

  விழாமல் விழும் இலை 
  நீ!
  விழுந்திடும் போது,
  எழாமல் நின்று 
  உலாவும் காற்றெனை அலாதம் எனத்
 தவிக்கவைக்கிறாய்!

 வராமல் வரும் நெடும் தூரம் நீ
  நெருங்கிடும் போது,
 வராமல் நின்று
 ஏக்கம் தருகிறாய்!

உராயும் உந்தன் நினைவில் மட்டும் ,
தராயாய் முளைத்து என்
 நெஞ்சறை ஆழ்கிறாய்!

குறிப்பு : அலாதம்-கரி
                  தராய்-மேட்டு நிலம்


Wednesday 5 July 2017

என்ன சொல்லி நான் எழுத?

 என்ன சொல்லி நான் எழுத?


 வாயறைக்குள் அடைக்கப்படும்
 உணர்ச்சிகளின்
 வாசகங்கள்!
 ஜீவனுக்குள் குடிகொண்ட
 ஜீரணிக்கா இலட்சியங்கள்!

மீண்டும் மீண்டும்
வந்து செல்லும் கனவுகளும் ஒளியிழக்க;
மீட்சி இல்லா உளரல்களும்
காட்சி இல்லா கனவுகளும்!

இன்று,நாளை என்று தேடும்
என்றோ வரும் ஒரு விடியல்!
அன்று வரும் நாளை எண்ணி
என்ன சொல்லி நான் எழுத?

உதயத்தை மாற்றிக்கொடு இறைவா என
நான் கேட்டேன்.-உனக்கு
உயரத்தில் தகுதி இல்லை என்றானோ?
நான் தோற்றேன்!

நாளை எனும் கனவு ஒன்று எனக்கு மட்டும்
பழிப்பதில்லை!
நாளைக்காக இன்றே அந்த வானில் தேடும் என் உதயம்.
என்ன சொல்லி நான் எழுத ?


 என்னுலகம் இருள்க்குமிழி.
 கண்க்குத்தும் மெளன ஈட்டிகள்!
 பல மைல் நீள
 பசுமைக் கனவுகள்.
 பிரதிபிம்பம் கான எங்கும் ஒளியில்லா
 இராட்சச இருள்க் காடு!

என்ன சொல்லி நான் எழுத?
 நாளை வரும் உதயமொன்று,
 எறித்துச்செல்லும்
 இருளை என்றா?

குமிழி உடைத்துப் பரவுகின்ற
 சூரியர்கள் தாம் எங்கே?
 கும்மிருட்டில் உலவுகிறேன்!
 சூழ்ந்தென்னை மீட்டிட வாரீர்!

மனதுக்குள் என் குமுரல்!


மனதுக்குள் என் குமுரல்!



 இலை உதிர் பருவம்,
  நினைவின்,
   அலைகளின் ததும்பல்!

  மழை எனப் பொழியும்
  மிதக்கின்ற 
   நினைவதன் துகள்கள்!

  விரல் கோர்த்த
  சாலை உலாவல்கள்,
  விளையாட்டில்
  நீயும் நானும் மட்டும்.



https://www.instagram.com/mkovalevskaya_ru/


I dedicate my poem for all of my friends. I miss you all and very badly miss my school days. Dear friends still I can remember that every moment I spent 

 பசுமை இழந்த இன்றில்
  மருபடி ஒரு நேற்றைத் தேட...
  பருவம் மாறிட உருவம் மாறிய
 பள்ளி அறையும் ,
 நீயும் நானும்...

இன்னும் ஒருமுறை
 இழந்தைவை காண,
 எட்டிப் பார்க்கும்
 எந்தன் நெஞ்சம்!

வகுப்பறைக்குள் சுருண்டுகிடக்கிறது
இன்னும் மனது!
வரும்வரை காத்திருக்கும் 
பிந்திய நொடிகள்!
மருபடி ஏங்கி நிற்கும்
மயங்கிய பார்வை!

மனதுக்குள் என் குமுரல்!
 

Tuesday 4 July 2017

ஒரு உதயம்

Listen mp3 song ஒரு உதயம்

பல சூரியர்கள்,
எட்டிப்பார்க்கிரார்கள்.
பட்டமாய் ஒரு
புள்ளியில்
சிறு சூரியன்.
யன்னலோரம் ஒழிந்துகொண்ட
மின்னா விளக்கொன்று,

அது அடைக்கப்பட்ட அளரலின் பார்வையோ?
அடக்கப்பட்ட அச்சத்தின் வேர்வையோ?
ஒரு நொடி








 The Force Don Winslow Instant New York Times Bestseller Book.  Recommended for summer reading by Amazon, New York Times, Time, Entertainment Weekly, Newsday, Miami Herald, Pittsburgh Post-Gazette, Edmond News, Rutland Herald, Seattle Times, AM New York, BookBub

ஒரு தூசிப் புயல்...



ஒரு தூசிப் புயல்...


 மழை மருவி ,
பிழைத்துப் போன ஜாதகம் போல்...
 நிலை மறந்து வறண்டு போன நிலம் என
அடரா முள் பற்றை குத்த
வளித்தும் ஓர் நிழல் தேடும் எண்ணக் கிடங்கு!

வனம் வளர்த்த வசந்த காலம் அது.
மலர் பறித்த  சிரிப்பு,
அப்பப்பா...!
இறகு விரிக்கும் எப்பட்சியும்
உறவாட மறக்கா காடது!


கண் கூசப் பருத்துப் போன சூரியன் இப்பொழுது...
கண்ணையும் பறித்துக் கொண்டால்
என்?
வன்முறை தான் காண்கிறேன்!
ஆம்!
இயற்கைக்குக் கூட வன்முறை பழகிப்போய்விட்டது!

 தூர தேச அலைகள் இங்கு வந்து
 தொட்டுச் செல்வதென,
 ஏக்கங்கள் சில் என்று...
 எங்கோ ஒரு விட்டில் புற்றுக்குள்
 ஒரு குறல் ஒழிந்துகொண்டு!
 கிள்ளிக் கிள்ளி
 என்னை வா என்னும்,
 எண்ணப் பிம்பம்.

நிசப்தத்தில் ஓடுமா உயிர்?
துடிதுடிக்கும் ஒரு இருதயம் வேண்டாம்?
நாடி நாளச்  சந்திப்பின் அர்த்தம் மெய்ப்பட வேண்டாம்?

உயிர் சரிந்து,ஆவி சிதைந்து
புதையுண்ட என்
உருவ சுவாலை.
புயல் பறந்த சூனியக் காட்டில்...
புதைந்தது -வெறும்
'புதைந்தது' தானோ?

இருளைக் கணக்கிட்டு
விதியில் உரசிப் பார்த்து,
இன்னொரு
பஞ்சாங்கம் புதிதாய் எதற்கு?

புயலில் மாண்டு
புழுவென ஓடும்
இழிவோர் உடலுக்கு!
மணல் மூடி மாதமாகியும்
சுழல் காற்று தாண்டிப் போயினும்
கருவுள் சுருண்டு சிஸுப் பயிற்சி?

என்ன,
மீண்டும் பிறக்கவா?
இருளில் இருக்கும் சுக மௌனம்,
மறு பிறவியில் கேட்குமா ?

அல்லது,
ஏலவே என்னை அடித்த
 அரக்கப்
 புயல் கூட மறந்து
 போகுமா?
 கொந்தளித்த திசுக்
 குமிழ்கள் ,
 சோக ஆற்றின் ரத்தக்
 கரைகள்,
 சோர்ந்து போனால் போகட்டும்
என்று
 மீண்டொரு பிறப்பு
 எதற்கெனக்கு?


  மணலுக்குள் இருக்கும் பொறுமை
  மறுபடி
  ஜீவனிழக்கட்டும் என,
  சரித்துவிட்டா மேல் எழ நான்?

மீண்டும் நானெழுந்து
மாண்டு நாரிழக்க
மீண்டும் ஓர் ஜென்மம்
நானே எதற்கெடுக்க?

மேலும் எழா
கீழும் தொடா
புதைந்துண்ட
புதிய தோற்றம்,
பிணமும் அல்ல,
உடலும் அல்ல
  உரிமை சொல்லா உருவம் இது!

மணலில் ஒரு புதையல் தான் நான்!
மணல்ப் படுக்கையின்,
மௌனம் இறக்கும் போது!