Wednesday, 5 July 2017

என்ன சொல்லி நான் எழுத?

 என்ன சொல்லி நான் எழுத?


 வாயறைக்குள் அடைக்கப்படும்
 உணர்ச்சிகளின்
 வாசகங்கள்!
 ஜீவனுக்குள் குடிகொண்ட
 ஜீரணிக்கா இலட்சியங்கள்!

மீண்டும் மீண்டும்
வந்து செல்லும் கனவுகளும் ஒளியிழக்க;
மீட்சி இல்லா உளரல்களும்
காட்சி இல்லா கனவுகளும்!

இன்று,நாளை என்று தேடும்
என்றோ வரும் ஒரு விடியல்!
அன்று வரும் நாளை எண்ணி
என்ன சொல்லி நான் எழுத?

உதயத்தை மாற்றிக்கொடு இறைவா என
நான் கேட்டேன்.-உனக்கு
உயரத்தில் தகுதி இல்லை என்றானோ?
நான் தோற்றேன்!

நாளை எனும் கனவு ஒன்று எனக்கு மட்டும்
பழிப்பதில்லை!
நாளைக்காக இன்றே அந்த வானில் தேடும் என் உதயம்.
என்ன சொல்லி நான் எழுத ?


 என்னுலகம் இருள்க்குமிழி.
 கண்க்குத்தும் மெளன ஈட்டிகள்!
 பல மைல் நீள
 பசுமைக் கனவுகள்.
 பிரதிபிம்பம் கான எங்கும் ஒளியில்லா
 இராட்சச இருள்க் காடு!

என்ன சொல்லி நான் எழுத?
 நாளை வரும் உதயமொன்று,
 எறித்துச்செல்லும்
 இருளை என்றா?

குமிழி உடைத்துப் பரவுகின்ற
 சூரியர்கள் தாம் எங்கே?
 கும்மிருட்டில் உலவுகிறேன்!
 சூழ்ந்தென்னை மீட்டிட வாரீர்!

No comments:

Post a Comment