Wednesday 27 December 2017

கொண்டாடப்படும் தினங்கள்: -ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 25th December 2017 07:08 PM  |  அ+அ அ-   |  
ஒவ்வொருவர் பெயருக்காக
ஒதுக்கப்பட்ட நாட்காட்டி.
இவ்வளவு நாட்கள்
ஓராண்டில்,ஆனாலும்,
இறந்து கிடக்கின்ற
இவள் வரலாறு!
துறத்திக்கொண்டு தான்
தூரங்களைக் கடக்கிறேன்!
தூரிகை பழையது,
முடிகொட்டுகிறது வயதாகியதால்!
துகள் பூக்க ஆரம்பித்துவிட்டது
முடிக்கப்படமுன்னரே ஓவியங்களில்!
தூசி தட்டப்படாமலேயே
யாசித்திருக்கிறது...
துரத்திப்பிடித்து
யன்னல்த் திறக்க
ஒரு ஒளி ;ஒரு சாவி;ஒரு தென்றலேனும்...?
என் வரலாறு,
இன்னுமே பூட்டிவைக்கப்பட்டு...!
என் பாதைகளெங்கும் தடயமழிக்கப்பட்டு!
இவள் ஜனனம்
என்பதே புதைந்து வாழ்ந்துகொண்டு...!
ஒரு
நாளைக் கைப்பற்றி
அதில்
நானும் பெயரெழுதி
திரு
நாளெனக் கொண்டாட,
புது தினம் ஒன்று
நான் கேட்பேன்...
என்
பெண்மைக்கோர்
பெயர் கொண்டு,
உயர்
உயில் ஒன்று வேண்டும்!
எனக்கே
உரித்தான
உரிமைகள்
உரித்துக்காட்ட;
சிறுமையில்லாப்
பெருமை வேண்டும்!
பாரதியின்
புதுமைப்
பெண்,
பாதங்கள்
பதிந்த ஏடுகள்
நாட்களைக்
காட்டி
நிலைக்கை வேண்டும்!
தீண்டாமை
தீப்பற்றி,
நீறாக வேண்டும்!
தீமைகள் எதிர்க்கின்ற
உரிமைகள் கொண்டு
பெண்மைக்கு உயிர்வாழ
நாட்க்காட்டி வேண்டும்!
அச்சுப் பதித்த
எழுத்தில் மட்டும் தங்கும்
நிச்சயமற்ற
நிழல்ப் படம் அல்ல!
நிகரே இல்லாப் பெண்மையின்
நிலைக்கும் வாழ்க்கை வேண்டும்!

Sunday 17 December 2017


மனத்திற்கிட்ட கட்டளை: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 17th December 2017 01:52 PM  |   அ+அ அ-   |  
மனதிலே மொய்க்கும்
மன்மத வில்,
என்னை
மலர்களால் தாக்கும்
காதலியே...!
பார்க்கின்ற கண்ணைப் 
பார்க்காதே என்று சொல்லி,
கேட்கின்ற காதை
ஏற்காதே என்று மூடி,
தோற்றுவிட்டாய் என்ற எண்ணம்
ஊட்டிவிட்டேன் மனதுக்குள்!
தோண்டிப் பாய்கிறதே
உயிர் மின்சாரம்!
நெடுந் தொலைவில் நான்
நடந்தேன் 
நீ தொலைத்த பாதை
நெருடா...
உன் கண்களெனும் கேமராவின்
இருண்ட
பக்கங்களில்.
சூரியன் எதிர்த்
திசை
சிறிதேனும் 
தொட்டிடாமல்
சுழன்றவனானேன் நானும்
தொடர்ந்து ,
உன் நிழல் 
மிதிக்காது 
என் பகலை!
யன்னல் கம்பிகள்
உடைத்துப் போட்டேன்
உன் குரல் அதற்க்குள்
உலவாதிருக்க!
பின்னல் பாய்கள்
அவிழ்த்துப் போட்டேன்
பிரிந்தே போகும்
தூக்கம் மீட்க்க!
ஆனாலும்,
மொய்த்துக்கொண்ட 
அம்புகளெல்லாம்
கொய்துவிட்ட என் மொத்த
அசைவுகள்!
நான் தொலைந்தேன்
நீ எனக்குள்!
கான்பதெலாம்
நிஜமில் புதுமை...
போட்டோஷோப்பில் பல முறை
நுழைந்தேன்!
தீ எரிந்து
எண்ணை ஊற்ற
திருட்டு அனங்கன்
ஏவிவிட்டாயோ?
பொன் ஏட்டில்
ப்ரோக்ரேம் எழுதி
என் ஹாட்டில்
பதித்துவிட்டாயோ?
பித்துப் 
பிடித்து
பித்தளைத் தட்டாய்
சத்தம் போடுதடி
சிரசு!
நீ இட்ட
கமான்ட் எல்லாம்
நிற்காது ஓடுது 
என்னில்!
வைரஸ் அழிக்க
விருப்பமில்லை,
விஸா பெற்ற
விஷமி நீயல்லோ!
விரும்பியே நானும்
கைதியானேன்!
விரும்பவே செய்தது
கைது செய்தல்லோ!
என் மனதைக்
கைப்பற்றி விலங்கிட்ட
சைபர் போலிஸ்!
லொக் இன் ஆனவன்
பாஸ்வர்டை மறந்துவிட்டேன்!
தூக்கத்திலும் குக்கீஸ்
பரப்பும்,
டேட்டாக் கொள்ளைக்காரி!
அட்மினே ஆகிவிட்டாய்
சிஸ்டம் எல்லாம்
அரசு செய்யும்!
பெண் எனும் பிரபஞ்சம்.
  அவளுக்குள் மிதக்கின்றன
பருவங்கள்.
 
பிறக்க முன்னும்
கண்
திறக்க முன்னும்
இறக்க முன்னும்
மறக்கா பெண்மை!
முளை
விடும் ஒரு
தளிர்
விதை அறுத்துக்கொண்டு,
தடுக்காத தாய்மை அங்கு
பொறுத்திருக்கும்!
சேய் உயர்ந்தெழத் தன்னில்.
ஒரு துணிக்கை
உயிர்த் தரிக்க
பிறப்பாள் மறுபடி
இறந்து உயிர்த்து!
நிலவுக்கு இணை,
பல முகத்தில்ப் பெண்மை.
என்ப்புழமையும்
எழுதாத பன்மை,
நிழல் இல்லாமல்
நிற்கின்ற பெண்மை!
உயிர்ப்பெற்றவள்
உலகம் உதித்தது!
உயிர்க் குடித்திந்த
உலகம் உதிர்த்துது!
உதிரம் அவள்
உரமாய் மாறுது!
மரம் ஒவ்வொன்றும்
பலமாய்த்தான்
நிற்குது.
அழகு மலர்களைக்
கசக்கும் உலகம்!
அது இறக்கவும் இல்லை!
மறுபடி பிறப்பதும் இல்லை!
எதற்க்கென வாழும் வாழ்க்கை...
வாடியே கழிக்கவா
வாழ்க்கை?
பூமியைக் கையால்
தாங்குகிறாள்,
பூக்களெல்லாம்
தலை கொய்யப்படுகின்றன!
நுரைக்கின்ற பாசம்!
கடல் அவள் மனமாகும்.
வீழும் அதன் ஆழம்
கரம் பிடித்த அவள் ஸ்நேகம்.
கதறும் துளியிலும்
தாகம் தீர்க்கும்
உதறும் இவ்வுலகம்!
தாறுமாறாய்
கிழித்துத் தீர்த்து
நாருரிக்கப்படும்
கீழ்மை!
அவளில் பிரிந்து
உயிர்ப் பெற்று,
அவளை மிதித்தே
பலம் பெற்று,
அவளின் மடியில்
இடம் பெற்று,
அவளை மட்டும்
ஏன் தூற்ற?
முழுவதும் அவளிடம்
எடுத்து,
முடிவிலும் அவளுடன்
கழித்து,
முழுவதும் அவள்
பிழிந்தெடுத்து,
எதுவுமே இல்லை
அவளின்றி,
என்றான நம்
வாழ்க்கை.

shahi sadique

Monday 4 December 2017

விடையில்லா விடுகதை: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 04th December 2017 06:47 PM  |   அ+அ அ-   |  
சேலைத் தலைப்பில் 
போர்த்தப்பட்ட நாட்குறிப்பேடு;அவள்
சேகரித்த எண்ணங்களின் இருதயம்
அது!
பின்னலிடை கூந்தல்
கொண்ட சிக்கல் எல்லாம்,
பிறப்பிலேயே எழுதப்பட்ட
பின் விளைவோ...!? $:--
ஒரு
திறக்க(வே) படா
டயரியின் சொந்தக்காரி...
அவள்.
அடுக்கடுக்காய்க் 
காய்ந்து போன 
ஆசைகளின் மையெச்சங்கள்!
புத்தகம் இன்னுமே திறக்கப்படாமல்!
வெட்கப் பூட்டுப் போட்ட
பெண்ணின் விரல் நுணிகள்!
வெறுமனே வரண்டுகொண்டு...
பாவையவள் வெறும் மரப்
பாவை தானோ?
பார்வையவள் மற்றவர்
பார்வைக்குள் தானோ?
பாதைகள் பல
பார்த்திடலின் ஆவல்
பாதியவள் மீதி பிறர்
பாதையில் ஒரு வாழ்க்கை!
அறமோ ?முறையோ?
ஒரு 
சந்தனக் காடு
அஞ்சனம் கரைந்தே
நிரந்தரம் இழந்தது!
நெஞ்ச வியர்வை
நிரப்பி வடித்தது!
பெண்ணின் மெளன
எண்ணம், 
கண்கள் படா .
சேலைகளால் உரிஞ்சப்பட்டு...
விரல் நுணிகளின் 
விவரங்கள் யாரறிவார்?
திரள் உருண்டைப் பிண்டமல்ல,
அவளும் ஒன்றும்.
சுவர்ப் பல்லி,
கதவு யன்னல்,
சுற்றியுள்ள சொந்தங்கள்...
சுற்றிலும்
 குற்றமே காணும் 
சுட்டிடும் பார்வை கொண்டோர்!
சிரிப்பதற்கோர் கண்ணாடி,
கழிப்பதற்கோர்க் கட்டில் மட்டும்
சிறைப்பட்ட உணர்ச்சியெல்லாம்
கருமையின் இரா மறைப்பு.
மலராத ஒரு
மொட்டு,
பிரித்து திறக்கப்படும் வரையா
காத்திருப்பு?
பொகுட்டு விரிக்கும்
இரும்புக் கரங்களின்
இறுக்கப்பிடிகளுக்குள்
கசங்கி வாழ!
மலராமலே கருகிப் 
போகும்,
மரத்துண்டா இவள்
எதிர்காலம்?