Tuesday, 27 February 2018

எங்கும் எதிலும்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 25th February 2018 04:51 PM  |   அ+அ அ-   |  
வாழ்க்கை சக்கரமாகிறது...
கருப்பு வெள்ளை ஒன்றி
சுழல்ந்து வண்ணம் 
தருவதே வாழ்க்கை.
ஒளிக்குள் இருள்
நுழைகிறது,
இரவுள் பகல் முடிகிறது.
இன்று நாளையில் 
சங்கமிக்கும் போது,
எங்கிருக்கும் என்
சாலை?
பிழையுள் பிறந்து
கிளைகள் பரப்பிய 
பிண்டத்தின் வடுக்கள்
கைரேகை!
சுழல்கின்றது பாதை 
நெடியதென்று யாருரைத்தார்?
அது சுழன்றுகொண்ட
நீட்சி!
பருவகாலங்கள் 
திரும்புகின்ற வாழ்க்கை.
நிருத்தப்படாத நேரத்துள்
உருண்டுகொண்டு நான்...
துளைக்கப்பார்க்கும் சுரங்கம் 
இது.
நிலைக்கா நிசிகளில் 
எதனைப் பிடித்து வைக்க?
வழுக்கிச் செல்வதோ
விதியின் 
வழியே...
நானும் நீயும்
சந்தித்து 
நீங்கிடும் சஞ்சாரப் புள்ளிகள்!
நீழுமா பயணம்?
தூரங்களிலும் 
சேய்மைகளிலும்
நேரத்தோடு போட்டியுண்டு.
சேர்ந்து போன
நேற்றும் நாளையும்
ஊர்ந்து போயின ,
இன்னும் இன்றைப்
பிடிக்கவில்லை!
நேற்றின் அமுக்கம்
நாளையைத் தொடும்போது,
இன்று நசுங்கிக்கொண்டு
நீளம் இழக்கிறது...
நான் 
நீ என்ற வட்டம்
நாளை இன்றில்
நீழ்கிறபோது...
எங்கும் எதிலும்
தொட்டுச் செல்கிறோம்
பட்டும் படாமல்.

No comments:

Post a Comment